ஜூலை 4 குறிச்சாச்சு.. DELTA லைட் இன்டர்பேஸ்.. ELLA ஏஐ.. டெக்னோ போவா 7 சீரிஸ்.. இந்திய மார்கெட்டில் உறுதி!
இந்திய மார்கெட்டில் டெக்னோ போவா கர்வ் 5ஜி (TECNO POVA Curve 5G) மாடலானது, பட்ஜெட்டில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா மட்டுமல்லாமல், ஸ்டார்ஷிப்-இன்ஸ்பையர்ட் டிசைனில் வெளியாகி பட்டையை கிளப்பியது. இப்போது, அதேபோல மற்றொரு புதிய டிசைனில் டெக்னோ போவா 7 சீரிஸ் (TECNO POVA 7 Series) இந்திய மார்கெட்டில் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த மாடல்களை எதிர்பார்க்கலாம்? விற்பனை விவரங்கள் எப்படி? என்னென்ன பீச்சர்கள் கிடைக்கும்? முழு விவரங்கள் இதோ.
ஜூலை 4ஆம் தேதி இந்தியாவில் இந்த சீரிஸ் வெளியாக இருக்கின்றன. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவதும் உறுதியாகி இருக்கிறது. அதோடு ரியர் கேமராவில் டெல்டா லைட் இன்டர்பேஸ் (Delta Light Interface) இடம்பெற்றுள்ளது. இந்த லைட் மூலம் நோட்டிபிகேஷன் ஸ்டேட்டஸ் மற்றும் கேமிங் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை கஸ்டமைஸ் செய்து வைத்துகொள்ளலாம். டெக்னோ போவா கர்வ் 5ஜி போலவே இந்த மாடல்களும் புது டிசைனில் வர இருக்கின்றன.

டூயல் ரியர் கேமரா கிடைக்கிறது. எல்லா ஏஐ (Ella AI) சப்போர்ட் கிடைக்கிறது. ஃபிளாஷ் லாஞ்ச் ஆப்கள் (Flash Launch App), மெம்ஃப்யூஷன் 3.0 (MemFusion 3.0), சென்சரி ஸ்கெடூலிங் 2.0 (Sensory Scheduling 2.0) போன்ற பல்வேறு யுஐ அப்கிரேட்களையும் கொடுக்க இருக்கிறது. இந்த விவரங்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. இருப்பினும், குளோபல் மார்கெட்டில் டெக்னோ போவா 7 சீரிஸ் வெளியாகிவிட்டது.
ஆகவே, அந்த மாடல்களின் பீச்சர்களை பார்த்தால், இந்தியாவில் என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம் என்பது தெரியவரும். இதில் டெக்னோ போவா 7 5ஜி (TECNO POVA 7 5G), டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி (TECNO POVA 7 5G) மற்றும் டெக்னோ போவா 7 அல்ட்ரா 5ஜி (TECNO POVA 7 5G) ஆகிய மாடல்களை எதிர்பார்க்கலாம். இதில் அல்ட்ரா மாடலில் மட்டுமே டெல்டா லைட் இன்டர்பேஸ் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஏனென்றால், குளோபல் மார்கெட்டில் வெளியான டெக்னோ போவா 7 அல்ட்ரா 5ஜி மாடலிலேயே டெல்டா லைட் இன்டர்பேஸ் கொடுக்கப்பட்டது. மற்ற மாடல்களில் அதே கேமரா டிசைன் வந்தாலும், லைட் இன்டர்பேஸ் கிடையாது. ஆகவே, குளோபல் மார்கெட்டில் வெளியான அல்ட்ரா மாடலின் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். இந்தியாவிலும் இதே பீச்சர்கள் கிடைக்கலாம்.

டெக்னோ போவா 7 அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (TECNO POVA 7 5G Ultra Specifications): இந்த அல்ட்ரா மாடலில் 6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8350 அல்டிமேட் (MediaTek Dimensity 8350 Ultimate) சிப்செட் கிடைக்கிறது.
13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 108 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 70W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. ஹை ஓஎஸ் 15 (HiOS 15) கிடைக்கிறது. இதில் ஹைப்பர் கேமிங் என்ஜின் (Hyper Gaming Engine) கிடைக்கிறது. இதே பீச்சர்களை இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications