Home
Mobile

தீபாவளி ஆஃபர் பிச்சிக்குது.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் பிக் பேக் தீபாவளி சேலில் (Big Bank Diwali Sale) டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி (TECNO POVA 7 Pro 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங் மட்டுமல்லாமல், சோனி சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா, அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் சிப்செட் கொண்ட இந்த டெக்னோ போனின் முழு விவரங்கள் இதோ.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் பிக் பேக் தீபாவளி சேலில் ரூ.1,500 விலை குறைப்பு போக ரூ.17,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.750 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,749 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

தீபாவளி ஆஃபர் பிச்சிக்குது.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 64MP கேமரா!

டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி அம்சங்கள் (TECNO POVA 7 Pro 5G Specifications): இந்த டெக்னோ ஸ்மார்ட்போனில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (1224 x 2720 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் மட்டுமல்லாமல், 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது.

மேலும், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2304Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த பட்ஜெட் மாடல்களில் கிடைக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமனசிட்டி 7300 அல்டிமேட் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Ultimate 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) அப்டேட் மற்றும் 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது. ஃபிளாஷ் ஆப் லாஞ்ச் (Flash App Launch), மெம்ஃப்யூஷன் 3.0 (MemFusion 3.0), ஏஐ கால் அசிஸ்டன்ட் (AI Call Assistant), ஏஐ ஆட்டோ அன்சர் (AI Auto Answer) போன்ற பீச்சர்களுடன் ஹைய்ஓஎஸ் 15 (HiOS 15) கிடைக்கிறது. இதுபோக எல்லா ஏஐ (Ella AI) அசிஸ்டன்ட் உள்ளது.

இந்த டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 64 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இதில் சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) சென்சார் கிடைக்கிறது. அதேபோல 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ரியர் கேமராவை சுற்றி டெல்டா இன்டர்பேஸ் லைட்னிங் கிடைக்கிறது.

பேக்கப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்கில் பட்டையை கிளப்பி இருக்கிறது. 6000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த பேட்டரியுடன் 8.15 எம்எம் தடிமன் மற்றும் 195 கிராம் எடை வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் கிடைக்கிறது.

ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) & டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் டைனாமிக் கிரே (Dynamic Grey), நியான் சியான் (Neon Cyan), கீக் பிளாக் (Geek Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO POVA 7 Pro 5G With 64MP Camera Available Under Rs 17000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X