Home
Mobile

ரூ.12,999 தான்.. ஆர்டர் தெறிக்க போகுது.. 104 மினி எல்இடி Delta Light, 6000mAh பேட்டரி, 5ஜி.. ஜூலை 10 SALE!

டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் 2 புதிய பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஒன்று - டெக்னோ போவா 7 5ஜி (Tecno Pova 7 5G) மாடல்; இன்னொன்று - டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி (Tecno Pova 7 Pro 5G) மாடல் ஆகும். என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது முதல் விற்பனை? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்:

டெக்னோ போவா 7 5ஜி, டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்: இரண்டுமே மீடியாடெக்கின் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் சிப்செட்டால் இயக்கப்படுகின்றன மற்றும் 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6000mAh பேட்டரிகளை கொண்டுள்ளன.

ரூ.12,999 தான்.. 104 மினி எல்இடி Delta Light, 6000mAh பேட்டரி, 5ஜி!

இவ்விரு ஸ்மார்ட்போன்களிலும் தனித்துவமான விற்பனை புள்ளி ஒன்றும் உள்ளது. இவ்விரு மாடல்களுமே பேக் பேனலில் வைக்கப்பட்டுள்ள ஒரு புதிய மல்டி-ஃபங்க்ஸ்னல் டெல்டா லைட் இன்டர்பேஸை கொண்டுள்ளன. மேலும் இரண்டுமே பல இந்திய மொழிகளை ஆதரிக்கும் டெக்னோவின் எல்லா ஏஐ (Ella AI) உடன் வருகின்றன.

டெக்னோ போவா 7 5ஜி, டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள்: இந்தியாவில் டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,999 க்கும், அதே நேரத்தில் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலைகள் அனைத்து வங்கி சலுகைகளையும் உள்ளடக்கிய வரையறுக்கப்பட்ட கால விலைகள் என்று டெக்னோ நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது Geek Black, Magic Silver மற்றும் Oasis Green ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும்.

மறுகையில் உள்ள டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.16,999 க்கும், அதே நேரத்தில் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது Dynamic Grey, Geek Black மற்றும் Neon Cyan ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும்.

ரூ.12,999 தான்.. 104 மினி எல்இடி Delta Light, 6000mAh பேட்டரி, 5ஜி!

டெக்னோ போவா 7 5ஜி, டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனை தேதி: டெக்னோ போவா 7 5ஜி, டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி ஆகிய 2 மாடல்களுமே வருகிற ஜூலை 10 ஆம் தேதி முதல் பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்குவதற்கு கிடைக்கும் என்று டெக்னோ நிறுவனம் அறிவித்துள்ளது.

டெக்னோ போவா 7 5ஜி, போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களின் விரிவான அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் 6.78-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே (144Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்)
- ஸ்டாண்டர்ட் மாடலில் 6.78-இன்ச் FHD+ LTPS IPS டிஸ்பிளே (900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்)

- இரண்டுமே 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன மற்றும் 256ஜிபி வரை UFS 2.2 ஆன்போர்டு ஸ்டோரேஜை வழங்குகின்றன.
- ப்ரோ வேரியண்ட் 8ஜிபி LPDDR5 ரேம்-ஐ ஆதரிக்கும் அதே வேளையில், வெண்ணிலா மாடல் 8ஜிபி LPDDR4 ரேம் உடன் வருகிறது

- இரண்டுமே ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான HiOS 15 உடன் வருகின்றன
- தமிழ், இந்தி, மராத்தி மற்றும் பல இந்திய மொழிகளை ஆதரிக்கும் எல்லா ஏஐ சாட்போட் ஆதரவையும் கொண்டுள்ளன
- குறைந்த நெட்வொர்க் மற்றும் தொலைதூர பகுதிகளில் கனெக்டிவிட்டியை மேம்படுத்தும் 4x4 MIMO ஆதரவையும் கொண்டுள்ளன
- VOWiFi டூயல் பாஸ் அம்சமும் உள்ளது, இது SIM 1 ஆக்டிவ் ஆக இருக்கும்போது SIM 2-வில் கால் வெயிட்டிங் அலெர்ட்-ஐ பெற அனுமதிக்கிறது.

- வெண்ணிலா மாடலில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் ஒரு லைட் சென்சார்
- ப்ரோ மாடலில் 64 மெகாபிக்சல் சோனி IMX682 பிரதான சென்சார் + 8-மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார்
- இரண்டு ஸ்மார்ட்போன்களும் 13 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளன

- இரண்டுமே 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளன
- ப்ரோ மாடலில் 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவும் கிடைக்கும்
- ரியர் கேமரா யூனிட்களை சுற்றி வைக்கப்பட்டுள்ள புதிய டெல்டா லைட் இன்டர்பேஸ் ஆனது ம்யூசிக், நோட்டிபிகேஷன்கள், வால்யூம் மற்றும் சார்ஜிங்கிற்கு எதிர்வினையாற்றும் 104 மினி எல்இடி லைட்களை உள்ளடக்கியுள்ளது

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Pova 7 5G Pova 7 Pro 5G With New Delta Light Interface Launched in India Sale Starts July 10
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X