முரட்டு ஆளு.. ரூ.20000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 24GB ரேம்.. 70W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
எந்தவொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் கொடுக்காத டிசைன் மற்றும் பட்ஜெட்டில் 24ஜிபி ரேம், 70W சார்ஜிங், 108எம்பி கேமரா, டைனாமிக் லைட் பேனல், 6000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் டெக்னோ போவா 6 ப்ரோ (TECNO POVA 6 Pro) போன் வெளியாகிறது.
இந்த போன் மார்ச் 29ஆம் தேதி இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்படுகிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அடுத்தடுத்து அம்சங்கள் வெளியாகி வருகின்றன. இந்த போனின் குளோபல் வேரியண்ட் ஏற்கனவே வெளியாகிவிட்டது. ஆகவே, அதன் அம்சங்களை முதலில் பார்ப்போம்.

டெக்னோ போவா 6 ப்ரோ அம்சங்கள் (TECNO POVA 6 Pro Specifications): இந்த போன் போவா மாடல்களை போலவே டைனாமிக் லைட் எஃபெக்ட் பேக் பேனல் (Dynamic Light Effect Back Panel) கொண்டிருக்கிறது. காமெட் க்ரீன் (Comet Green), மெட்ராய்டு கிரே (Meteorite Grey) ஆகிய கலர்களில் வருகிறது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78 இன்ச் ஃபுல் எச்டிபிளஸ் (Full HD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 2160Hz PWD டிம்மிங் ஃபிரிகொன்சி கொண்டிருக்கிறது. 24 ஜிபி ரேம் (12 ஜிபி ரேம் + 12 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வருகிறது.
அதேபோல 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டும் இருக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.

ஹைய்ஓஎஸ் 14 (HiOS 14) சப்போர்ட் உள்ளது. டைனாமிக் போர்ட் 2.0 (Dynamic Port 2.0) நோட்டிபிகேஷன் பீச்சர் கொண்டுள்ளது. ஏஐ லென்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆகவே, 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா + ஏஐ லென்ஸ் வருகிறது.
இந்த கேமராவில் 3X இன்-சென்சார் ஜூமிங் சப்போர்ட் உள்ளது. டூயல் டோன் எல்இடி பிளாஷ் சப்போர்ட் கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த டெக்னோ போனின் பேட்டரி சிஸ்டமும் மிரளவிடுகிறது. 6000mAh பேட்டரியானது, 70W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) சப்போர்ட் உடன் வருகிறது.
IP53 வாட்டர் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Water & Splash Resistat) வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) கொண்டிருக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் உள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. மேற்கூறிய அம்சங்களில் பேட்டரி, கேமரா, டிஸ்பிளே, டிசைன் மற்றும் கலர் ஆகிய அம்சங்களே இந்திய வேரியண்ட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், மற்ற அம்சங்களும் குளோபல் வேரியண்ட்டை போலவே இருக்கும் என்பதில் சந்தேமில்லை.
இந்த போனின் விலையை பொறுத்தவரையில், ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்ஜெட்டில் 24 ஜிபி ரேம், 70W பாஸ்ட் சார்ஜிங், எல்இடி பேக் பேனல், அமோலெட் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் வருவதால், விற்பனையில் சக்கைப்போடு போட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








