கொளுத்தும் விற்பனை.. பட்ஜெட்ல 108MP கேமரா.. 6000mAh பேட்டரி.. 16GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
108எம்பி கேமரா, 6000mAh பேட்டரி, 256ஜிபி மெமரி, பைபாஸ் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், டைனாமிக் லைட் பேனல் கொண்ட டெக்னோ போவா 6 ப்ரோ (TECNO POVA 6 Pro) போனுக்கு பிளிப்கார்ட்டில் மிரளும் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.
இந்த டெக்னோ போவா 6 ப்ரோ போனானது, மிட்-பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், மற்ற போன்களில் கிடைக்காத டிசைன் கொண்ட மாடலாக இருப்பதால், விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. பைபாஸ் சார்ஜிங் போன்ற புது டெக்னாஜி கொண்டிருக்கும் இந்த போனின் முழு அம்சங்களை முதலில் பார்ப்போம்.

டெக்னோ போவா 6 ப்ரோ அம்சங்கள் (TECNO POVA 6 Pro Specifications): இந்த போவாவில் 6.78 இன்ச் (2436 ×1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+)ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2160Hz டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.
டிசைனை பார்க்கையில், காமெட் கிரீன் (Comet Green), மெட்ராய்டு கிரே (Meteorite Grey) கலர்களில் டைனாமிக் லைட் எஃபெக்ட் (Dynamic Light Effect) பேக் பேனல் கொண்டிருக்கிறது. இந்த பேனலில் காலிங், சார்ஜிங், கேமிங்கின் போது எல்இடி எஃபெக்ட் இன்டிகேஷனை பார்க்க முடியும்.
இந்த டெக்னோ போவா 6 ப்ரோ போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஹைஓஎஸ் 14 (HiOS 14) வருகிறது. அதுமட்டுமல்லாமல், மாலி ஜி57 கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது.

இந்த மாடலில் 2 வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. ஆகவே, 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் (12 ஜிபி ரேம் + 12 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் உள்ளது.
இந்த போனில் 108 எம்பி அல்ட்ரா விவிட் கேமரா (Ultra Vivid Camera) + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 10எக்ஸ் கேமரா ஜூம் கொண்டுள்ளது. டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ் (Dual-tone LED Flash) கொண்ட 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.
70W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 10W ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) மற்றும் பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) சப்போர்ட் வருகிறது. மேலும், எஸ்டிஎஸ் செக்யூர் பேட்டரி டெக்னாலஜி (STS Secure Battery Technology), சார்ஜிங் வாட்டர் டிடெக்சன் (Charging Water Detection) வருகிறது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் வருகிறது. இந்த டெக்னோ போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் கிடைக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








