தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.12000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 16GB ரேம்.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
108 எம்பி கேமரா போனுக்கு இதைவிட கம்மியா டிஸ்கவுண்ட் கிடைக்காது, ஆகவே ஆர்டர் அடித்து நொறுக்கலாம் என்று சொல்லும்படி டெக்னோ போவா 6 நியோ 5ஜி (TECNO POVA 6 NEO 5G) மாடலானது, அமேசான் விற்பனையில் (Amazon Sale) கிடைக்கிறது. 108 எம்பி கேமரா மட்டுமல்ல, 16 ஜிபி ரேம், 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் போன்ற மற்ற பீச்சர்களிலும் கஸ்டமர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த டெக்னோவின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.
டெக்னோ போவா 6 நியோ அம்சங்கள் (TECNO POVA 6 NEO Specifications): இந்த டெக்னோவில் ரூ.12000 பட்ஜெட்டிலும் ஏஐ கேமரா பீச்சர்களுடன் டூயல் கேமரா கிடைக்கிறது. ஏஐஜிசி போர்ட்ராய்டு (AIGC Portrait), ஏஐ கட்அவுட் (AI Cutout), ஏஐ ஆர்ட்போர்ட் (AI Artboard), ஏஐ எரைசர் (AI Eraser) பீச்சர்களுடன் 108 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் கிடைக்கிறது.

இதே ஏஐ பீச்சர்களுடன் 8 எம்பி செல்பீ ஷூட்டர் இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த 128 ஜிபி வேரியண்ட்டில் கூடுதலாக 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரியும் இருக்கிறது.
ஆகவே, ரேம் மற்றும் மெமரியில் எந்த குறையும் இருக்காது. ஏனென்றால், ஆரம்ப மாடலே 16 ஜிபியுடன் கிடைக்கிறது. டிஸ்பிளேவில் பட்ஜெட்டுக்கு ஏற்ப அவுட்புட் எதிர்பார்க்கும்படி 6.67 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) பேனல் வருகிறது. இருப்பினும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷனும் பேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த டெக்னோ போவா 6 நியோ போனின் ஓஎஸ் மற்றும் சிப்செட் பட்டையை கிளப்புகிறது. இந்த ரூ.12000 பட்ஜெட்டிலும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஹைஓஎஸ் 14.5 (HiOS 14.5) மற்றும் மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் இருக்கிறது.
இந்த ஹைய்ஓஎஸ் மூலம் டைனாமிக் போர்ட் (Dynamic Port) பீச்சர் கிடைக்கிறது. ஆடியோவை ஒன்றும் சொல்வதற்கில்லை. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) இருக்கிறது. IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side-mounted Fingerprint) சென்சார் உள்ளது.
இந்த டெக்னோ போவா 6 நியோ போனில் டைமன்சிட்டி 6300 சிப்செட் வருவதால், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி வருகிறது. மேலும், ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் வை-பை 802 (Wi-Fi 802) கிடைக்கிறது. 18W சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி இருக்கிறது.
இந்த டெக்னோவின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆக இருக்கிறது. அமேசான் தளத்தில் ரூ.1000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.974 பேங்க் டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.12,286 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. அடிமட்ட பட்ஜெட்டில் 108 எம்பி கேமரா கொண்ட போன் வேண்டுமானால், இந்த போன் பக்கா தேர்வாகும்.


Click it and Unblock the Notifications