ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,999 பட்ஜெட்ல 108MP கேமரா.. 5000mAh பேட்டரி.. அறிமுகமானது புது TECNO போன்.. எந்த மாடல்
டெக்னோ நிறுவனம் இன்று டெக்னோ போவா 6 நியோ 5ஜி (Tecno Pova 6 Neo 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 108எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
டெக்னோ போவா 6 நியோ 5ஜி அம்சங்கள் ((Tecno Pova 6 Neo 5G specifications):6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 x 720 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.

108எம்பி பிரைமரி கேமரா + AI லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர டூயல் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதேபோல் ASK AI, ஏஐ மேஜிக் எரேசர் (AI Magic Eraser) மற்றும் பல மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் இந்த புதிய டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் Side-mounted fingerprint sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போன்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ஆக்டோ கோர் மீடியாடெக் டைனம்சிட்டி 6300 6nm (Octa Core MediaTek Dimensity 6300 6nm)சிப்செட் உடன் டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் HiOS 14.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். ஆனால் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வசதியைக் கொண்டுள்ளது டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் IP54 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) ஆதரவுடன் இந்த புதிய டெக்னோ போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
5000mAh பேட்டரி உடன் டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி ( NFC), யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 192.3 கிராம் எடை கொண்டுள்ளது இந்த புதிய டெக்னோ போன். அசூர் ஸ்கை (Azure Sky), மிட்நைட் ஷேடோ (Midnight Shadow) மற்றும் அரோரா கிளவுட் (Aurora cloud) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.
6ஜிபி ரேம் கொண்ட டெக்னோ போவா 6 நியோ 5ஜி போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி வேரியண்ட் விலை ரூ.14,999-ஆக உள்ளது. குறிப்பாக செப்டம்பர் 14-ம் தேதி அமேசான் (amazon) தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.12,999 விலையில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications