செப்டம்பர் 11 உறுதி..108எம்பி கேமரா.. AI அம்சம்.. 12ஜிபி ரேம்.. வருகிறது Tecno 5ஜி போன்.. எந்த மாடல்?
டெக்னோ நிறுவனம் தனது புதிய டெக்னோ போவா 6 நியோ 5ஜி (Tecno Pova 6 Neo 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 11-ம் தேதி இந்த புதிய போன் இந்தியாவில் அறிமுகமாகும். குறிப்பாக மேம்பட்ட ஏஐ அம்சங்கள், 108எம்பி கேமரா மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
டெக்னோ போவா 6 நியோ 5ஜி அம்சங்கள் (Tecno Pova 6 Neo 5G specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

எச்டிஆர் ஆதரவு கொண்ட 108எம்பி பிரைமரி கேமரா உடன் டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதேபோல் ASK AI, ஏஐ மேஜிக் எரேசர் (AI Magic Eraser)மற்றும் பல மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் இந்த புதிய டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த புதிய போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
மீடியாடெக் சிப்செட் உடன் டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். ஆனால் ஆண்டராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

7000mAh பேட்டரி உடன் டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸபி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்த புதிய டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,999-விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும். மேலும் இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








