Home
Mobile

போட்டு தாக்கும் TECNO.. ரூ.15,000 க்கு புது 5G போன்..120Hz டிஸ்பிளே, 108MP கேமரா, 5000mAh பேட்டரி! எந்த மாடல்?

இந்திய மொபைல் சந்தையில் ஒரே ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து, அதை வைத்து நத்திங் (Nothing) நிறுவனத்தின் ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் சரித்து விட்ட டெக்னோ (Tecno) நிறுவனம், அதன் அடுத்த 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது போல் தெரிகிறது.

நத்திங் கொண்டு வந்த கிளிஃப் இன்டர்பேஸ் எல்இடி லைட்டிங் போன்ற டிஸைனுடன் அறிமுகமான டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி (Tecno Pova 6 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமானதால் இந்தியாவில் நல்ல விற்பனையை கண்டது. கூடவே அதிக விலை நிர்ணயம் கொண்ட நத்திங் போன்களின் இந்திய விற்பனையை சரித்தும் விட்டது.

போட்டு தாக்கும் TECNO.. ரூ.15,000 க்கு புது 5G போன்!

இதற்கிடையில் டெக்னோ போவா 6 5ஜி (Tecno Pova 6 5G) ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த லீக்டு போஸ்டர் வழியாக, இந்த ஸ்மார்ட்போன் ப்ரோ மாடலை போல பேக் பேனலில் 210 எல்இடி லைட்கள் உடனான மினிஎல்இடி லைட்டிங் செட்டப்பை பேக் செய்யாது; மாறாக வழக்கமான பேக் பேனல் டிசைனை பெறும் என்பதை தெளிவாக பார்க்க முடிக்கிறது.

டெக்னோ போவா 6 5ஜி: என்ன விலைக்கு வரலாம்? என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே
டைனமிக் போர்ட் 2.0
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்
மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட்
108எம்பி மெயின் கேமரா
8ஜிபி ரேம், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
5000mAh பேட்டரி
33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்

டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான ம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் ஹைஓஎஸ் 14 (HiOS 140 கொண்டு இயங்குகிறது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே 2160ஹெர்ட்ஸ் PWM டிம்மிங் மற்றும் லோட் ப்ளூ லைட் உமிழ்வுகளுக்கான TUV ரைன்லேண்ட் சான்றிதழையும் கொண்டுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, இது 6 என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஐபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜில் இருந்து கூடுதலாக 12ஜிபி விர்ச்சுவல் ரேம்-ஐ கடன் வாங்கி, இந்த ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 24ஜிபி ஆக விரிவாக்க முடியும்.

வெப்ப மேலாண்மைக்காக இந்த டெக்னோ 5ஜி ஸ்மார்ட்போனில் மொத்தம் 2,7342 மிமீ குளிரூட்டும் பகுதியை கொண்டுள்ளது. இ-ஸ்போர்ட்ஸ் ப்ரோ ஆபரேஷன் இன்ஜின் மற்றும் கேமிங்கிற்கான 4டி வைப்ரேஷன் சென்ஸும் இதில் அடங்கும்.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் 108 மெகாபிக்சல் மெயின் சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் எல்இடி ஃபிளாஷ் உடனான 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. மேலும், டால்பி அட்மாஸ் ஸ்பேஷியல் சவுண்ட்டிற்கான ஆதரவுடன் வரும் முதல் டெக்னோ ஸ்மார்ட்போனான இதன் பேக் பேனலில் 210 எல்இடிகளுடன் டைனமிக் மினிஎல்இடி லைட்ஸ் செட்டப்பும் உள்ளது.

இதன் மினிஎல்இடி லைட்ஸ் செட்டப்பை, உங்களுக்கு வரும் வாய்ஸ் கால்கள், ஸ்மார்ட்போனின் பவர் ஸ்டேட்டஸ், நீங்கள் விளையாடும் கேம்ஸ் மற்றும் கேட்கும் ம்யூசிக் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ஏற்றபடி கஸ்டமைஸ் செய்யலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 70W சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

டெக்னோ நிறுவனத்தின் கூற்றுப்படி , இந்த பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமானது வெறும் 20 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவீதத்திற்கும், 50 நிமிடங்களில் 100 சதவிகிதத்திற்கும் பேட்டரியை நிரப்பும். மேலும் இந்த்ஸ் மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 11 மணி நேரத்திற்கும் மேலான கேமிங், 14 மணிநேர வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் 31 மணி நேரத்திற்கும் அதிகமான காலிங் நேரத்தை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Pova 6 5G with 5000mAh Battery 108MP Camera Tipped to Launching Soon What Will be the Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X