மார்க்கெட்டே அதிர போகுது.. 108எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. வருகிறது புது Tecno 5ஜி போன்.. எந்த மாடல்?
டெக்னோ நிறுவனம் விரைவில் டெக்னோ போவா 6 5ஜி (Tecno Pova 6 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த புதிய போனின் டீசர் வெளியாகி உள்ளது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் டெக்னோ போவா 6 5ஜி ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் சில அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
டெக்னோ போவா 6 5ஜி அம்சங்கள் (Tecno Pova 6 5G Specifications): 3X ஜூம் கொண்ட 108எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த டெக்னோ போவா 6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண் டிஸ்பிளே, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் டெக்னோ போவா 6 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த போனின் சில அம்சங்கள் தான் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளிவரும். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த டெக்னோ பாப் 9 5ஜி (TECNO POP 9 5G) போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
டெக்னோ பாப் 9 5ஜி அம்சங்கள் (TECNO POP 9 5G Specifications): ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் இந்த புதிய டெக்னோ பாப் 9 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் HiOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும்.
6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1612 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.
டெக்னோ பாப் 9 5ஜி போனின் பின்புறம் 48எம்பி சோனி ஐஎம்எக்ஸ்582 (Sony IMX582) பிரைமரி கேமரா மற்றும் ஏஐ செகண்டரி லென்ஸ் ஆதரவும் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல சிறப்பான கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

அதேபோல் IP54 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and Splash resistant) கொண்டுள்ளது இந்த டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி ((Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. இந்த போனின் எடை 189 கிராம் ஆகும். தற்போது இந்த போன் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








