சரவெடி டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.10,399 போதும்.. 16GB ரேம்.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
டெக்னோ ஃபெஸ்டிவ் சீசன் விற்பனையில் (TECNO Festive Season Sale) ஸ்மார்ட்போன் பிரியர்களை அறக்க பறக்க செய்யும் விதமாக 16ஜிபி ரேம், 50எம்பி கேமரா, 6000mAh பேட்டரி போன்ற பிரம்மாண்ட அம்சங்களை கொண்ட டெக்னோ போவா 5 போன் அடிமட்ட விலையில் கிடைக்கிறது.
டெக்னோ போவா 5 அம்சங்கள் (TECNO POVA 5 Specifications): இந்த போன் 6.78 இன்ச் (1080 x 2460 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (Full HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 (Android 13) மற்றும் ஹாய்ஓஎஸ் 13 (HiOS 13) ஓஎஸ் கொண்டுள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (Octa Core MediaTek Helio G99 6nm) மற்றும் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 (Arm Mali-G57 MC2) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது.
அதோடு மைக்ரோ எஸ்டி (microSD) சப்போர்ட் வருகிறது. இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. இதுவொரு ஏஐ கேமராவாகும். அதோடு டூயல் எல்இடி பிளாஷ் இடம் பெற்றுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டெக்னோ போவா மாடலில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி (Type-C) சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. அதோடு 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), டிடிஎஸ் (DTS) சப்போர்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.
இந்த போனின் கனெக்விட்டி அம்சங்களை பார்க்கையில், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5 (Bluetooth 5), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எஃப்சி (NFC) ஆகியவை வருகின்றன. இந்த போவா மாடலில் அம்பர் கோல்டு (Amber Gold), மெக்கா பிளாக் (Mecha Black) மற்றும் ஹரிக்கேன் ப்ளூ (Hurricane Blue) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, டெக்னோ ஃபெஸ்டிவ் சீசன் விற்பனையை முன்னிட்டு வெறும் ரூ.10,399 கிடைக்கிறது. அதேபோல ரூ.14,999 விலை கொண்ட டெக்னோ போவா 5 ப்ரோ (The POVA 5 Pro) மாடல் வெறும் ரூ.12,899க்கு கிடைக்கிறது.
இந்த விற்பனையில் பிரீமியம் மாடலான டெக்னோ பாண்டம் வி போல்ட் (TECNO Phantom V Fold) மாடல் ரூ.77,499க்கு கிடைக்கிறது. இதன் மார்கெட் விலை ரூ.78,499ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல ரூ. 54,999 விலை கொண்ட டெக்னோ பாண்டம் வி ஃபிளிப் (TECNO Phantom V Flip) மாடல் ரூ.53,499க்கு கிடைக்கிறது.
இந்த போன்களை அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட்டை பெற எஸ்பிஐ பேங்க் (SBI Bank) கார்டுகளை பயன்படுத்த வேண்டும். அதோடு மூன்று மாதத்துக்கான நோ காஸ்ட் இஎம்ஐ (No Cost EMI) சலுகையும் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








