Home
Mobile

மார்கெட் காலி.. வெறும் ரூ.10,000 பட்ஜெட்ல 16GB ரேம்.. 45W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி.. எந்த போன்?

பிளிப்கார்ட் விற்பனையில் மிரளும் டிஸ்கவுண்ட்டில் வெறும் ரூ.10000 பட்ஜெட்டில் 16ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 45W சார்ஜிங், 6000mAh பேட்டரி போன்ற மூக்கில் விரல் வைக்கும்படியான அம்சங்களுடன் டெக்னோ போவா 5 (TECNO POVA 5) விற்பனை செய்யப்படுகிறது.

டெக்னோ போவா 5 அம்சங்கள் (TECNO POVA 5 Specifications): இந்த டெக்னோ போவா மாடல் டர்போ மெக்கா டிசைன் (TURBO MECHA DESIGN) கொண்ட பேக் பேனல் கொண்டுள்ளது. அதோடு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (1080 x 2460 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு எல்சிடி டிஸ்பிளே மாடலாகும்.

வெறும் ரூ.10,000 பட்ஜெட்ல 16GB ரேம்.. 6000mAh பேட்டரி.. எந்த போன்?

இந்த டெக்னோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (Octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் வருகிறது. அதோடு ஹாய்ஓஎஸ் 13 (HiOS 13) மற்றும் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 (Arm Mali-G57 MC2) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டெக்னோ போவா போனில் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு ஏஐ செகண்டரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் டூயல் வீடியோ (Dual Video), ஸ்கை ஷாப் (Sky Shop) போன்ற மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த போனில் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு 1 ஜிபிக்கான மைக்ரோ எஸ்டி சப்போர்ட் கொண்டுள்ளது. வெறும் ரூ.10000 பட்ஜெட்டில் அதிகப்படியான ரேம் மற்றும் மெமரி சப்போர்ட் கிடைக்கும் போன்களில் இந்த மாடல் முன்னணியில் இருக்கிறது.

வெறும் ரூ.10,000 பட்ஜெட்ல 16GB ரேம்.. 6000mAh பேட்டரி.. எந்த போன்?

இந்த டெக்னோ போவா மாடலில் பேட்டரி தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க எஸ்டிஎஸ் பேட்டரி டெக்னாலஜி (STS BATTERY TECHNOLOGY) பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு டைப்-சி (Type-C) சார்ஜிங் போர்ட் வருகிறது. அதோடு சூப்பர் பவர் சேவிங் மோட் கொண்டிருக்கிறது.

இந்த டெக்னோ போவா 5 மாடலில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டுள்ளது. அதோடு 3.5 எம்எம் இயர்போன் ஜாக் (3.5mm Earphone Jack) வருகிறது.

இந்த போவா போனில் மெக்கா பிளாக் (Mecha Black), அம்பர் கோல்டு (Amber Gold) மற்றும் ஹரிக்கேன் ப்ளூ (Hurricane Blue) ஆகிய மூன்று கலர்கள் விற்பைனைக்கு வருகின்றன. இதுவொரு 4ஜி மாடலாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5 (Bluetooth 5), ஜிபிஎஸ் (GPS), வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் என்எஃப்சி (NFC) ஆகிய கனெக்டிவிட்டி வருகிறது.

இந்த டெக்னோ போவா மாடலின் 8 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.11,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மிட்-ரேஞ்ச் அம்சங்களுடன் மலிவான விலையில் விற்பனைக்கு வந்ததால், மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இந்த விற்பனையை மேலும் சூடு பிடிக்க வைக்கும் விதமாக பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் அதிரடி டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போனை எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டு (SBI Bank Credit Card) பயன்படுத்தி வாங்கினால், ரூ.1890 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாலை வெறும் ரூ.10,109க்கு வாங்கிக்கொள்ள முடியும். அதோடு ரூ.600 பேஸ்கெட் ஆஃபரும் வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO POVA 5 Under Rs 10000 in Flipkart Sale With 20 Percent Discount Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X