Home
Mobile

நத்திங் எதுக்கு? ரூ.16,000 போதும்.. 16GB ரேம்.. 6000mAh பேட்டரி.. LED லைட்னிங் பேனல்.. எந்த மாடல்?

இந்தியாவில் டெக்னோ போவா 5 ப்ரோ போன் அடுத்த சில வாரங்களில் வெளியாக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நத்திங், இன்பினிக்ஸ் போன்களில் வரும் எல்இடி லைட்னிங் பேக் பேனல் டிசைனில் பின்னியெடுக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

இன்பினிக்ஸ், நத்திங் போன்களின் டிசைனுக்கு நிகராவும் அவற்றின் பட்ஜெட்டை விட மிகவும் கம்மியான விலைக்கும், டெக்னோ போவா 5 ப்ரோ போன் விற்பனைக்கு வருகிறது. இந்த நேரத்தில் அந்த போனின் முழு அம்சங்கள் என்ன? எப்போது விற்பனைக்கு வரும் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ரூ.16,000 போதும்.. 16GB ரேம்.. LED லைட்னிங் பேனல்.. எந்த மாடல்?

டெக்னோ போவா 5 ப்ரோ அம்சங்கள் (TECNO POVA Pro 5 Specifications): இந்த டெக்னோ போன் 6.78 இன்ச் (1080 x 2460 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஹாய்ஓஎஸ் 13 (HiOS 13) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (Octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் வருகிறது. அதோடு ஆர்ம் மாலி - ஜி57 எம்சி2 (Arm Mali-G57 MC2) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போன் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டுள்ளது. அப்படி மொத்தமாக 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என 2 வேரியண்ட்கள் வருகின்றன. அதோடு மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது.

இந்த போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு டூயல் எல்இடி பிளாஷ் வருகிறது. அதேபோல 8 எம்பி செல்பீ கேமராவும் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. மேலும், டூயல் நானோ மற்றும் எஸ்டிகார்டு போர்ட், சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் 5, வைபை 802, என்ஃப்சி போன் அம்சங்கள் வருகின்றன.

மெக்கா பிளாக் (Mecha Black), ஹரிகேன் ப்ளூ (Hurricane Blue), ஆம்பர் கோல்டு (Amber Gold) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் தாய்லாந்து நாட்டில் விற்பனைக்கு வந்து, மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது, இந்தியாவில் வெளியாக இருக்கிறது. இந்த போன் அமேசானில் வெளியாவது, உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.11,576ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.13,425ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை தாய்லாந்தில் நாட்டில் விற்பனையாகும் பட்ஜெட்டாகும். ஆனால், இப்போது எல்இடி பேக் பேனல் லைட்ஸ், 5ஜி என்று கூடுதல் அம்சங்களுடன் இந்தியாவில் வெளியாவதால், ரூ.16,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது.

இந்த விலை விவரங்கள் அடுத்த வாரம் தெரிந்துவிடும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO POVA 5 Pro With 16GB RAM, 6000mAh Battery Confirmed Sales on Amazon Price Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X