அசூர விற்பனை.. முழுசா ரூ.1500 கட்.. ரூ.13499 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. யாரு விடுவா?
அமேசான் விற்பனையில் 16 ஜிபி ரேம், 68W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, ஏஆர்சி எல்இடி போன்ற மிரளவிடும் அம்சங்களை கொண்ட டெக்னோ போவா 5 ப்ரோ (Tecno Pova 5 Pro) போனுக்கு பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.
நத்திங் போன்களின் வருகைக்கு பிறகு பேக் பேனலில் எல்இடி லைட்ஸ் கொண்ட மாடல்களின் விற்பனை அதிகரித்துவிட்டது. அந்த வரிசையில், டெக்னோ நிறுவனம், அதன் டெக்னோ போவா 5 ப்ரோ மாடலில் ஆர்க் இன்டர்பேஸ் ஆர்ஜிபி (Arc Interface RGB) எல்இடி லைட்ஸ் கொடுத்திருந்தது. இருப்பினும், விலை மலிவாக நிர்ணயம் செய்யப்பட்டதால், விற்பனை சக்கைப்போடுபோட்டது.

இந்த விற்பனையானது, இப்போது அமேசானில் வழங்கப்படும் டிஸ்கவுண்ட் காரணமாக மேலும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் அந்த போனின் முழு அம்சங்களை பார்ப்போம். இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2460×1080 பிக்சல்கள்) ஃபுல் எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 580 பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு என்ஈஜி கிளாஸ் பாதுகாப்பு (NEG Glass Protection) கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் வருகிறது.
அதோடு ஹாய்ஓஎஸ் 13 (HiOS 13) மற்றும் மாலி - ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. அதோடு டூயல் எல்இடி பிளாஷ் மற்றும் ஆர்க் இன்டர்பேஸ் ஆர்ஜிபி லைட்ஸ் இடம்பெற்றுள்ளது.
16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த டெக்னோ மாடலில் 8 ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ரேம் கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு (micro SD Card) சப்போர்ட் வருகிறது.
இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போனில் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் விலையில் இருப்பதால், சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டிருக்கிறது.
இந்த மாடலில் 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்ஃஎப்சி (NFC) ஆகிய கனெக்டிவிட்டிகள் வருகின்றன. இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போனில் சில்வர் பேண்டஸி (Silver Fantasy) மற்றும் டார்க் இல்லூஷன் (Dark Illusion) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 14,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் அமேசான் (Amazon) தளத்தில் ரூ.1500 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இதற்கு எந்த பேங்க் கார்டையும் பயன்படுத்த வேண்டியதில்லை. அதேபோல ரூ.14,200 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








