கியூ கட்டி வாங்குவீங்க.. ரூ.15,000 போதும்.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. ஆர்க் LED பேக் பேனல்.. எந்த மாடல்?
ரூ.40,000 பட்ஜெட்டில் கிடைக்கும் நத்திங் போனின் டிசைன் வெறும் ரூ.15,000 விலையில் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதோடு 16ஜிபி ரேம், 256ஜிபி மெமரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற பிரம்மாண்ட அம்சங்களும் வந்தால் வாங்காமல் இருக்க முடியுமா?
நத்திங் போனின் வருகைப்பின், பேக் பேனலில் எல்இடி லைட்ஸ் கொண்ட போன்களுக்கான வரவேற்பு அதிகரித்துவிட்டது. இருப்பினும், நத்திங் போன் பட்ஜெட் விலையில் போனை அறிமுகம் செய்யாததால், அந்த விலையில் மற்ற நிறுவனங்கள் தங்களது போன்களை அறிமுகம் செய்து, எளிதாக வரவேற்பை பெற்று வருகின்றன.

ஆனால், டெக்னோ நிறுவனமோ வெறும் ரூ.15,000 பட்ஜெட்டில் எல்இடி பேக் பேனல் கொண்ட போனை அறிமுகம் செய்து ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றுவிட்டது. இந்த நிறுவனத்தின் டெக்னோ போவா ப்ரோ போன் (TECNO POVA 5 Pro) பற்றிய பேச்சே ஸ்மார்ட்போன் வட்டாரத்தில் அதிகப்படியாக பேசப்படுகிறது. இந்த போனின் அம்சங்கள் என்ன? இந்தியாவில் எப்போது வெளியாகும்? உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.
டெக்னோ போவா 5 ப்ரோ (TECNO POVA 5 Pro Specifications): இந்த டெக்னோ போனில் 6.78 இன்ச் (2460 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 580 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
அதோடு, என்இஜி கிளாஸ் புரொடெக்ஷன் (NEG Glass Protection) பாதுகாப்பு வழங்கப்படுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஹாய்ஓஎஸ் 13 (HiOS 13) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் வருகிறது.
அதோடு, மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali - G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் வசதி இருக்கிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது. அதோடு மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டெக்னோ போவா ப்ரோ போன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ராவைடு கேமரா என்னும் டூயல் ரியர் செட்டப் கொண்டுள்ளது. அதனுடன் டூயல் எல்இடி பிளாஷ் லைட் வருகிறது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமராவுடன் எல்இடி பிளாஷ் லைட் கொடுக்கப்பட்டுள்ளது.
68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியில் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், டூயல் நானோ சிம் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார், ப்ளூடூத் 5.1, டைப் - சி சார்ஜிங் போர்ட், என்எஃப்சி உள்ளிட்ட அம்சங்கள் வருகின்றன.
இந்த டெக்னோ போவா ப்ரோ போன் சில்வர் பேண்டஸி (Silver Fantasy) மற்றும் டார்க் இல்லூசன் (Dark Illusion) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் ஏற்கனவே, இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. அங்கு, இந்த டெக்னோ போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலையானது, இந்திய மதிப்பில் ரூ.16,050 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு அம்சங்களையும், ஆர்க் இன்டர்பேஸ் பேக் லைட்ஸ் டிசைனையும் கொண்டிருந்தும், பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால், இந்தியாவிலும் அந்த போனுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் டெக்னோ நிறுவனம், இந்தியாவிலும் டெக்னோ போவா ப்ரோ போன் வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளது.
ஏற்கனவே, அமோசானில் (Amazon) டெக்னோ போவா ப்ரோ போனின் மைக்ரோசைட் வெளியிடப்பட்டது. இப்போது, ஆர்க் இன்டர்பேஸ் பேக் லைட் குறித்த அறிவிப்புடன், விரைவில் அறிமுகமாகும் என்பதை குறிப்பிட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் டெக்னோ போவா ப்ரோ போன் வெளியாவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் பட்ஜெட் ரூ.15,000 ஆக நிர்ணயிக்கப்படவிருப்பதால் நல்வரவேற்பு பெறும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








