Home
Mobile

தூக்கி பாக்கெட்டில் போடும் விலை.. 50MP கேமரா, 68W சார்ஜிங்.. இன்று விற்பனைக்கு வரும் புதிய டெக்னோ 5ஜி போன்..

கடந்த வாரம் டெக்னோ நிறுவனம் இந்தியாவில் டெக்னோ போவா 5 மற்றும் டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த இரண்டு போன்களும் இன்று (22-08-2023) விற்பனைக்கு வருகிறது. அதாவது அமேசான் தளத்தில் இன்று மதியம் 12 மணி அளவில் விற்பனைக்கு வருகின்றன டெக்னோ போவா 5 மற்றும் டெக்னோ போவா 5 ப்ரோ போன்கள்.

குறிப்பாக டெக்னோ போவா 5 போனை ரூ.11,999 பட்ஜெட்டில் வாங்க முடியும். அதேபோல் ஆம்பர் கோல்ட் (Amber Gold), மெக்கா பிளாக் (Amber Gold) மற்றும் ஹரிகன் ப்ளூ (Hurrican Blue) இந்த டெக்னோ போவா 5 போன் வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

68W சார்ஜிங்.. இன்று விற்பனைக்கு வரும் புதிய டெக்னோ 5ஜி போன்..

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டெக்னோ போவா 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.14,999-க்கு வாங்க கிடைக்கும். பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.15,999-க்கு வாங்க கிடைக்கும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வாங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டெக்னோ போவா 5 ப்ரோ 5ஜி போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். சில்வர் பேண்டஸி (Silver Fantasy), டார்க் இல்லூசன் (Dark Illusion) நிறங்களில் இந்த டெக்னோ போவா 5 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது.

இப்போது டெக்னோ போவா 5 ப்ரோ 5ஜி (Tecno Pova 5 Pro) போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் டெக்னோ போவா 5 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 580 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போன். மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. ஆர்க் எல்இடி பேக் பேனல் கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போன். அதாவது இந்த போனின் பின்புறம் ஒளிரும் எல்இடி பேனல் உள்ளது. குறிப்பாக நோட்டிபிகேஷன், சார்ஜிங் நிலை மற்றும் கேம்கள் தொடங்கப்படுவதைப் பற்றி அறிவிப்பதற்காக இந்த போனின் பின்புறம் உள்ள எல்இடி லைட்டுகள் ஒளிரும். அதேபோல் இசையைக் கேட்கும்போது கூட எல்இடி லைட்டுகள் ஒளிரும்.

இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போனில் வால்யூம் பட்டன்கள் வலதுபுறத்திலும் சிம் ஸ்லாட் இடதுபுறத்திலும் உள்ளன. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் வசதி இதில் உள்ளது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன். ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) ஆதரவைக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

HiOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை கொண்டுள்ளது டெக்னோ போவா 5 ப்ரோ போன். மேலும் 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இந்த போனில் உள்ளது. பின்பு இதில் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்விட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

68W சார்ஜிங்.. இன்று விற்பனைக்கு வரும் புதிய டெக்னோ 5ஜி போன்..

50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் டூயல் எல்இடி பிளாஷ் ஆதரவு உள்ளது. அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

நத்திங் போன்கள் ரூ.35,000 பட்ஜெட்டில் கிடைக்கின்றன. ஆனால் நத்திங் போனில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போனிலும் உள்ளது. குறிப்பாக இந்த புதிய டெக்னோ போன் ரூ.15,000 பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Pova 5 Pro and Pova 5 phones on sale on Amazon today: Check price, Offers, specifications and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X