நத்திங் போன்களுக்கு வேட்டு வைக்கும் புதிய TECNO 5ஜி போன்.. வேறலெவல் டிசைன்.. கம்மி விலை..கொத்தா தூக்குவீங்க
நத்திங், இன்பினிக்ஸ் போன்களை காலி செய்யும் வகையில் டெக்னோ போவா 5 ப்ரோ எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவந்துள்ளது டெக்னோ நிறுவனம். இந்த புதிய டெக்னோ போன் நத்திங் போன் போன்று டிசைன் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்பது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நத்திங் போன்கள் இந்தியாவில் ரூ.40,000 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்த டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.14,999-விலையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 22-ம் தேதி இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது டெக்னோ போவா 5 ப்ரோ போனின் வடிவமைப்பு மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

வடிவமைப்பு: ஆர்க் எல்இடி பேக் பேனல் கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போன். அதாவது இந்த போனின் பின்புறம் ஒளிரும் எல்இடி பேனல் உள்ளது. குறிப்பாக நோட்டிபிகேஷன், சார்ஜிங் நிலை மற்றும் கேம்கள் தொடங்கப்படுவதைப் பற்றி அறிவிப்பதற்காக இந்த போனின் பின்புறம் உள்ள எல்இடி லைட்டுகள் ஒளிரும். அதேபோல் இசையைக் கேட்கும்போது கூட எல்இடி லைட்டுகள் ஒளிரும்.
இந்த போனில் வால்யூம் பட்டன்கள் வலதுபுறத்திலும் சிம் ஸ்லாட் இடதுபுறத்திலும் உள்ளன. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் வசதி இதில் உள்ளது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் இந்த அசத்தலான டெக்னோ போவா 5 ப்ரோ போன். மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
டெக்னோ போவா 5 ப்ரோ போன் அம்சங்கள் (TECNO POVA 5 Pro 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் டெக்னோ போவா 5 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 580 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போன். மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) ஆதரவைக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் HiOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை கொண்டுள்ளது டெக்னோ போவா 5 ப்ரோ போன்.
50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் டூயல் எல்இடி பிளாஷ் ஆதரவு உள்ளது. அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. பின்பு இதில் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்விட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
விலை மற்றும் சலுகைகள்: 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டெக்னோ போவா 5 ப்ரோ போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி அமேசான் தளத்தில் இந்த போனை வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும்.
photo courtesy: fonearena.com


Click it and Unblock the Notifications