வாரி தூக்கும் விலை.. வெறும் ரூ.12,749 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. LED பேனல்.. எந்த போன்?
எப்புடிங்க கொடுக்க முடியுது? என்று கேட்கும் அளவுக்கு ரூ.12,749 விலையில் 16ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 68W சார்ஜிங் போன்ற மிரளும் அம்சங்களுடன் டெக்னோ போவா 5 ப்ரோ (Tecno Pova 5 Pro) போன் விற்பனையாகிறது.
டெக்னோ போவா 5 ப்ரோ அம்சங்கள் (Tecno Pova 5 Pro Specifications): இந்த டெக்னோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் வருகிறது.

பக்காவான மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த மாடலில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera System) வருகிறது.
அதோடு எல்இடி பிளாஷ் மற்றும் மல்டி-கலர்ட் பேக்லிட் ஏஆர்சி இன்டர்பேஸ் லைட்னிங் இடம்பெற்றுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த டெக்னோ போவா 5 ப்ரோ மாடலில் 8 ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் வருகிறது.
அந்த வகையில், 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. மேலும் 1 டிபி வரையில் மைக்ரோ எஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தலாம். ஆகவே, டூயல் நானோ சிம் கார்டு சிலாட் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போவா போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2460×1080 பிக்சல்கள்) ஃபுல் எச்டிபிளஸ் (Full HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எல்சிடி (LCD) மாடலாகும். இதில் 580 பீக் பிரைட்னஸ் சப்போர்ட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.
மொத்தமாக என்ஈஜி கிளாஸ் பாதுகாப்பு (NEG Glass Protection) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டெக்னோ போவா போனில் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 68W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) சப்போர்ட் உள்ளது. டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் இருக்கிறது.
சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டெக்னோ போனில் வை-பை 802, ப்ளூடூக 5.1, ஜிபிஎஸ், என்ஃஎப்சி, 5ஜி என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.
இந்த டெக்னோ போவா 5 ப்ரோ மாடலில் டார்க் இல்லூஷன் (Dark Illusion) மற்றும் சில்வர் பேண்டஸி (Silver Fantasy) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த போன் அறிமுகம் செய்யப்பட்ட போது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இப்போது, அமேசானில் ரூ.1500 கூப்பன் டிஸ்கவுண்ட்டும், எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.750 உடனடி டிஸ்கவுண்ட்டும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.12,749க்கு வாங்கிக்கொள்ளலாம். மிகவும் கம்மியான விலையில் பக்காவான ரேம், சிப்செட், பேட்டரி மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைனில் போன் வேண்டும் என்றால், இந்த போனை தேர்வு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








