Home
Mobile

அனல் பறக்குது.. 6,000mAh பேட்டரி.. 6.7-இன்ச் டிஸ்பிளே.. இந்தியாவுக்கு வந்தது புதிய TECNO போன்கள்.! என்ன மாடல்?

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டெக்னோ போவா 5 மற்றும் டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு போன்களும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. இப்போது டெக்னோ போவா 5 மற்றும் டெக்னோ போவா 5 ப்ரோ போன்களின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

டெக்னோ போவா 5 ஹரிகேன் ப்ளூ (Hurricane Blue), மெக்கா பிளாக்(Mecha Black) மற்றும் ஆம்பர் கோல்ட்( Amber Gold) நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் டெக்னோ போவா 5 ப்ரோ ஆனது சில்வர் பேண்டஸி(Silver Fantasy) மற்றும் டார்க் இல்யூஷன் (Dark Illusion) நிறங்களில் வெளிவந்துள்ளது.

6,000mAh பேட்டரி.. இந்தியாவுக்கு வந்தது  புதிய TECNO போன்கள்.!

அதேபோல் 3டி டர்போ மெச்சா(3D Turbo Mecha) பேனல் ஆதரவைக் கொண்டுள்ளன இந்த இரண்டு போன்கள். கேமிங், இன்கம்மிங் கால், மெசேஜ், பேட்டரி குறையும் போதும் இந்த போன்களில் உள்ள எல்இடி லைட்டுகள் ஒளிரும் என்று கூறப்பட்டுள்ளது.

டெக்னோ போவா 5 ப்ரோ (Tecno POVA 5 Pro): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது டெக்னோ போவா 5 ப்ரோ. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல அசத்தலான டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஆக்டோ-கோர் மீடியாடெக் 6080 6என்எம் பிராசஸர்(Octa Core MediaTek Dimensity 6080 6nm) வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போன். அதேபோல் இதில் HiOS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.5எம்எம் ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5000 எம்ஏஎச் பேட்டரி, 68Wஃபாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போன் வெளிவந்துள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். அதேபோல் 16எம்பி செல்பி கேமரா, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.1, ஜபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெக்னோ போவா 5 (Tecno POVA 5): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான டெக்னோ போவா 5 ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு இதில் உள்ளது. மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டுள்ளது இந்த போன்.

ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் பிராசஸர் (Octa Core MediaTek Helio G99 6nm processor) வசதி டெக்னோ போவா 5 போனில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி இதில் உள்ளது. அதேபோல் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

6,000mAh பேட்டரி.. இந்தியாவுக்கு வந்தது  புதிய TECNO போன்கள்.!

50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த டெக்னோ போவா 5 போன் வெளிவந்துள்ளது. மேலும் 8எம்பி செல்பி கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி, 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

டெக்னோ போவா 5 ப்ரோ மற்றும் டெக்னோ போவா 5 ஸ்மார்ட்போன்கள் தற்போது அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த இரண்டு போன்களும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன்களின் விலை விரைவில் வெளியிடப்படும் என்று டெக்னோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த போன்களின் விலை வெளியானதும் உடனே அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno POVA 5, POVA 5 Pro Phones Launched in India: check specifications, sale date : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X