Home
Mobile

கும்பிடு போட்டு வாங்கலாம்.. 6000 எம்ஏஎச் பேட்டரி.. ஆர்க் LED பேக் பேனல்.. அசத்தும் Tecno போன்கள்.!

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டெக்னோ போவா 5 மற்றும் டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால் ஏற்கனவே இந்த இரண்டு போன்களும் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக டெக்னோ போவா 5 மற்றும் டெக்னோ போவா 5 ப்ரோ ஆர்க் இன்டர்பேஸ் பேக் லைட்ஸ் டிசைனை கொண்டு வெளிவரும். நந்திங் போன்களில் உள்ள அதே டிசைன் இந்த போன்களிலும் உள்ளது. ஆனால் நத்திங் போன்களின் விலை ரூ.40,000-க்கும் மேல் உள்ளது. இந்த டெக்னோ போவா 5 மற்றும் டெக்னோ போவா 5 ப்ரோ போன்கள் ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6000 எம்ஏஎச் பேட்டரி.. ஆர்க் LED பேக் பேனல்.. அசத்தும் Tecno போன்கள்!

டெக்னோ போவா 5 ப்ரோ (TECNO POVA 5 Pro 5G):ஆக்டோ-கோர் மீடியாடெக் 6080 6என்எம் பிராசஸர்(Octa Core MediaTek Dimensity 6080 6nm) வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.5எம்எம் ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5000 எம்ஏஎச் பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போன் வெளிவரும்.

டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 580 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். அதேபோல் 16எம்பி செல்பி கேமரா, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.1, ஜபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

டெக்னோ போவா 5 ( (TECNO POVA 5): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான டெக்னோ போவா 5 ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு இதில் உள்ளது. மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான போன்.

டெக்னோ போவா 5 ஸ்மார்ட்போனில் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் பிராசஸர் (Octa Core MediaTek Helio G99 6nm processor) வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி இதில் உள்ளது. அதேபோல் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த டெக்னோ போவா 5 போன் வெளிவரும். மேலும் 8எம்பி செல்பி கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி, 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும். ஆனால் இந்த போனில் 5ஜி ஆதரவு இல்லை.

6000 எம்ஏஎச் பேட்டரி.. ஆர்க் LED பேக் பேனல்.. அசத்தும் Tecno போன்கள்!

அதாது டெக்னோ போவா 5 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி ஆதரவுடன் வெளிவரும். மேலும் வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா 5 ஸ்மார்ட்போன். பின்பு டெக்னோ போவா 5 மற்றும் டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்ஜெட் விலையில் இந்த போன்கள் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னோ 3 நாள் கண்காட்சி நிகழ்வு ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 13 வரை புதுதில்லியில் உள்ள DLF அவென்யூவில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது, அங்கு வாடிக்கையாளர்கள் இந்த புதிய போன்களை வாங்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தரமான வடிவமைப்புடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno POVA 5, POVA 5 Pro Launch Date in India: check specifications, price, sale : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X