வாங்கலாம் போலயே! ரூ.15000 பட்ஜெட்டில் STS பேட்டரி! அப்படியென்ன மாடல்?
வெறும் ரூ.15000 பட்ஜெட்டில் சிறந்த கேமிங் போன் வாங்க வேண்டுமென்றால், உங்களுக்கு டெக்னோ நிறுவனத்தின் டெக்னோ போவா 5 (Tecno Pova 5) டர்போ மெச்சா போனே நல்ல சாய்ஸ், ஏனென்றால் இந்த போனில், ஹீலியோ ஜி99 சிப்செட், 6000mAh பேட்டரி, ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே வருகிறது.
இப்போது வரும் போன்களில் கேமிங் விளையாட ஏதுவான அம்சங்களை கொண்டிருக்கும் மாடல்களையே அனைவரும் விரும்புகின்றனர். ஏனென்றால், அந்த போன்களில் கொடுக்கப்படும் சிப்செட், பேட்டரி, கிராபிக்ஸ் கார்டு உள்ளிட்டவை கேமிங்குக்கு மட்டுமல்லாமல், மற்ற பயன்பாடுகளுக்கும் மிகுந்த உதவியாக இருக்கும். இதனாலேயே கேம் விளையாடவில்லை என்றாலும், கேமிங் போன்களை பலர் விரும்பி வாங்குகின்றனர்.

இதனால், ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் புதுப்புது தொழில்நுட்பங்கள் உடனும், அம்சங்களுடனும் கேமிங் போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், டெக்னோ நிறுவனத்தின் டெக்னோ போவா 5 டர்போ மெச்சா போன் அதிரடியான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த போனின் டிசைனே அள்ளித் தூக்குகிறது. இருப்பினும், மற்ற அம்சங்களை பின்வருமாறு பார்ப்போம்.
டெக்னோ போவா 5 அம்சங்கள் (Tecno Pova 5 Specifications): இந்த டெக்னோ போன் 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. மிட்ரேன்ஞ் போன்களில் வரும் மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி (MediaTek Helio G99 SoC) சிப்செட் வருகிறது.
இந்த டெக்னோ போவா 5 போன் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் என மொத்தமாக 16 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6,000mAh பேட்டரி இருக்கிறது. இதில் 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. இதில் எஸ்டிஎஸ் (STS) செக்யூர் பேட்டரி டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கேமிங் விளையாடும் போது பேட்டரி சூடாவது தவிர்க்கப்படும். அதோடு நீண்ட ஆண்டுகள் நீடித்து உழைக்கக்கூடியது. 21 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்துகொள்ள முடியும். 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. ஹரிக்கேன் ப்ளூ (Hurricane Blue), ஆம்பர் கோல்டு (Amber Gold) மற்றும் மெச்சா பிளாக் (Mecha Black) ஆகிய 3 மூன்று கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போனின் டிசைன் டர்போ மெச்சா என்றழைக்கப்படுகிறது. இதுவொரு பிரபலமான கார்டூன் ரோபோட்டாகும். இந்த டெக்னோ போவா 5 அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனின் விலை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், டெக்னோ போவா 4 (Tecno Pova 4) போன், ரூ.11,999 விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்ததால், இந்த போன் ரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
முழுக்க முழுக்க கேமிங் பிரியர்களை கவரும் வண்ணம் இருப்பதால், நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications