மார்கெட்டே அதிருது.. வெறும் ரூ.14,999 பட்ஜெட்டில் LED பேக் பேனல்.. 16GB ரேம்.. 256GB மெமரி.. எந்த போன்?
இந்திய மார்கெட்டே அதிரும்படி டெக்னோ போவா 5 ப்ரோ போனானது, வெறும் ரூ.15,000 விலையில் 16ஜிபி ரேம், 256ஜிபி மெமரி, 5000mAh பேட்டரி, ஃபுல்எச்டி டிஸ்பிளே, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன், ஆர்க் எல்இடி பேக் பேனலும் கொண்டுள்ளது.
இந்தியாவில் நத்திங் போனின் எல்இடி பேக் பேனல் டிசைன் மிகப்பெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, மற்ற ஸ்மாரட்போன் நிறுவனங்களும், எல்இடி பேக் பேனல் கொண்ட போன்களை அறிமுகம் செய்ய தொடங்கிவிட்டன. இந்த போன்களின் விலை குறைந்தது ரூ.35,000 க்கும் மேல் இருக்கும்.

ஆனால், டெக்னோ (TECNO) நிறுவனம், அந்த டிசைன் பேக் பேனல் கொண்ட போவா 5 சீரிஸ் (POVA 5 Series) போன்களை வெறும் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்களின் முழு அம்சங்கள், விலை மற்றும் விற்பனை தேதி குறித்த விவரங்கள் பின்வருமாறு.
டெக்னோ போவா 5 ப்ரோ (TECNO POVA 5 Pro Specifications): இந்த போன் 6.78 இன்ச் (2460 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 580 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஹாய்ஓஎஸ் 13 மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் விற்பனைக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல், மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ராவைடு கேமரா வருகிறது.
16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. மேலும், டூயல் நானோ சிம், 3.5 மிமீ ஆடியோ ஜாக், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் 5.1, என்எஃப்சி மற்றும் டைப் - சி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் வருகின்றன.
இந்த டெக்னோ போன் சில்வர் பேண்டஸி (Silver Fantasy), டார்க் இல்லூசன் (Dark Illusion) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.14,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெக்னோ போவா 5 அம்சங்கள் (TECNO POVA 5 Specifications): இந்த போன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (1080 x 2460 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஹாய்ஓஎஸ் 13 கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (Octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் வருகிறது.
அதோடு ஆர்ம் மாலி - ஜி57 எம்சி2 (Arm Mali-G57 MC2) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனும் 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் விற்பனைக்கு வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. மேலும், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் சப்போர்ட், ப்ளூடூத் 5 உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த டெக்னோ போவா 5 போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.11,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மெக்கா பிளாக் (Mecha Black), ஆம்பர் கோல்டு (Amber Gold) மற்றும் ஹரிக்கேன் ப்ளூ (Hurricane Blue) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போவா சீரிஸ் போன்கள் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும். கம்மியான பட்ஜெட்டில் நத்திங் போன் போன்ற டிசைன், பக்கவான அம்சங்கள் வேண்டும் என்றால், இந்த போன்களை தாராளமாக வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








