Home
Mobile

Tecno கொஞ்சம் கூட சும்மா இருக்காது போலயே.! பட்ஜெட்டில் Tecno Pova 4 போன் லான்ச்.!

டெக்னோ நிறுவனம் சமீபத்தில் மிக ஆக்டிவாக செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், Tecno நிறுவனம் தனது போவா 4 (Pova 4) என்ற சீரிஸில் மும்முரமாக வேலை செய்து வருகிறது.

காரணம், சமீபத்தில் டெக்னோ நிறுவனம் புதிய அறிமுகமாக டெக்னோ போவா 4 ப்ரோ (Tecno Pova 4 Pro) என்ற மாடலை லான்ச் செய்தது. அதனைத் தொடர்ந்து, இப்போது இந்நிறுவனம் டெக்னோ போவா 4 (Tecno Pova 4) மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது.

டெக்னோ போவா 4 சீரிஸ் போன்கள் எப்போது இந்தியாவில் அறிமுகம்?

டெக்னோ போவா 4 சீரிஸ் போன்கள் எப்போது இந்தியாவில் அறிமுகம்?

டெக்னோ சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள டெக்னோ போவா 4 (Tecno Pova 4) சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை நிறுவனம் கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யுமென்று தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்களை எப்போது அறிமுகம் செய்யும் மற்றும் எப்போது விற்பனையைத் துவங்கும் என்பதற்கான சரியான காலத்தை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சரியான, தேதிக்கு நாங்களும் காத்திருக்கிறோம்.

புதிய டெக்னோ போவா 4 ஸ்மார்ட் போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?

புதிய டெக்னோ போவா 4 ஸ்மார்ட் போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?

சரி, இந்த புதிய டெக்னோ போவா 4 ஸ்மார்ட் போனில் என்னென்ன அம்சங்களை எல்லாம் நிறுவனம் சேர்த்துள்ளது, இது எப்படி ப்ரோ (Tecno Pova 4 Pro) மாடலில் இருந்து வேறுபடுகிறது என்பது போன்ற விபரங்களைத் தெளிவாகப் பார்க்கலாம்.

புதிய Tecno Pova 4 ஸ்மார்ட்போன் சாதனம் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய ஒரே ஒரு வேரியண்ட்டாக மட்டுமே அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Tecno Pova 4 போனின் சிறப்பம்சம்

Tecno Pova 4 போனின் சிறப்பம்சம்

இந்த புதிய Tecno Pova 4 ஸ்மார்ட்போன் 6.82' இன்ச் IPS LCD HD+ ரெசொல்யூசன் உடன் கூடிய 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவுடன் வருகிறது.

நாம் முன்பே பார்த்தது போல், இந்த டிவைஸ் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த டிவைச MediaTek Helio G99 சிப்செட் உடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 5ஜிபி விர்ட்சுவல் RAM வசதியையும் கொண்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

Tecno Pova 4 கேமரா மற்றும் பேட்டரி அம்சம்

Tecno Pova 4 கேமரா மற்றும் பேட்டரி அம்சம்

கேமரா அம்சத்தைப் பற்றிப் பேசுகையில், இது 8MP முன்பக்க கேமரா மற்றும் பின்பக்கத்தில் டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.இதில் 50 MP ப்ரைமரி கேமரா மற்றும் 2 MP டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும்.

இந்த Tecno Pova 4 ஸ்மார்ட்போன் சாதனம் மிகப் பெரிய பேட்டரியுடன் வருகிறது.ஆம், இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் இயங்கும் 6000mah பேட்டரியை பேக் செய்கிறது.

இந்த Tecno Pova 4 போனின் முக்கிய சிறப்பம்சமாக இதன் பேட்டரி பார்க்கப்படுகிறது.

Tecno Pova 4 ஸ்மார்ட்போனின் விலை என்ன?

Tecno Pova 4 ஸ்மார்ட்போனின் விலை என்ன?

இதில் சைடு மவுன்ட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், AI ஃபேஸ் அன்லாக் வசதியும் உள்ளது.

ஆன்ட்ராய்டு 12 மூலம் வேலை செய்யும் இந்த ஸ்மார்ட்போன், டூயல் சிம் கார்ட் ஸ்லாட், 4G, டுயல் பேண்ட் வை-ஃபை, ப்ளூ டூத், GNSS, NFC, 3.5 mm ஹெட்போன் ஜாக், டைப் சி USB ஆகிய கூடிதல் அம்சங்களுடன் வருகிறது.

இந்த Tecno Pova 4 ஸ்மார்ட்போனின் விலை பற்றி பேசுகையில், இது BDT 21,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் இது இந்தியர்களை கவருமா?

பட்ஜெட் விலையில் இது இந்தியர்களை கவருமா?

இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 17,800 என்ற விலை புள்ளியை நெருங்குகிறது. இந்த புதிய டெக்னோ போவா 4 ஸ்மார்ட்போன் சாதனம் க்ரேய் மற்றும் ப்ளூ நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியச் சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் சில மாற்றங்களைப் பெறுமா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பட்ஜெட் விலையில் இப்போது 5ஜி போன்களே கிடைக்கும் பொழுது டெக்னோவின் இந்த 4ஜி போன் என்ன வரவேற்பை பெரும் என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Tecno Pova 4 with 6000mAh Big Battery Phone Launched At Budget Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X