Tecno Pova 4 Pro போன்ல எல்லாமே சூப்பர்.! ஆனா ஒரே ஒரு குறை.! இது தெரியாம வாங்க கூடாது.!

|

டெக்னோ (Tecno) நிறுவனம் அதன் போவா (Pova) சீரிஸ் வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் மாடலைச் சேர்த்துள்ளது. இதை நிறுவனம் Tecno Pova 4 Pro என்று அழைக்கிறது. இந்த புதிய டெக்னோ போவா 4 ப்ரோ (Tecno Pova 4 Pro) இப்போது பங்களாதேஷில் உலகளவில் அறிமுகமாகிறது.

இந்த புதிய Pova சீரிஸ் சாதனம் MediaTek Helio G99 சிப்செட் உடன் 8ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. மற்ற போவா சீரிஸ் சாதனங்களைப் போலவே இந்த ஸ்மார்ட்போன் 6000mah பேட்டரியைக் கொண்டுள்ளது.

Tecno Pova 4 Pro ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான அம்சங்கள்

Tecno Pova 4 Pro ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான அம்சங்கள்

பெரிய சைஸ் பேட்டரி உடன் சிறப்பான அம்சங்களை விரும்புபவர்கள் இந்த மாடலை கட்டாயம் பார்க்க வேண்டும்.

Tecno Pova 4 Pro ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான அம்சங்களாக அதன் 90Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் 50MP கேமரா அமைப்பு திகழ்கிறது. இந்த டிவைஸ் 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.

இதன் விலைக்கேற்ற சிறப்பான அம்சங்களுடன் இந்த சாதனம் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Tecno Pova 4 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Tecno Pova 4 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Tecno Pova 4 Pro ஸ்மார்ட்போனின் முழுமையான சிறப்பம்ச தகவலைத் தெரிந்துகொண்டு, இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விபரங்கள் பற்றி பார்க்கலாம்.

Tecno Pova 4 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சத்தைப் பற்றிப் பார்க்கையில், இந்த டிவைஸ் 90Hz ரெப்ரெஷ் ரேட் உடன் வரும் AMOLED டிஸ்பிளே பேனலைக் கொண்டுள்ளது.

இது 6.66' இன்ச் அளவு கொண்ட முழு HD+ தெளிவுத்திறனைக் கொண்ட டிஸ்பிளே மூலம் வெளிவந்துள்ளது.

இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!

Tecno Pova 4 Pro ஸ்மார்ட்போன் 13ஜிபி வரை ரேம் அம்சத்தை ஆதரிக்கிறதா?

Tecno Pova 4 Pro ஸ்மார்ட்போன் 13ஜிபி வரை ரேம் அம்சத்தை ஆதரிக்கிறதா?

சமீபத்திய Tecno Pova 4 Pro ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப்செட் உடன் வருகிறது. இது Mali G57 GPU-வைக் கொண்டு வருகிறது.

இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5ஜிபி எக்ஸ்டெர்னல் ரேம் இணைக்கும் அம்சமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் உங்களுக்கு மொத்தமாக 13ஜிபி ரேம் கிடைக்கிறது. இது ஆண்ட்ராய்டு 12 உடன் வருகிறது.

டெக்னோ போவா 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா எப்படி இருக்கிறது?

டெக்னோ போவா 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா எப்படி இருக்கிறது?

கேமராவைப் பொறுத்தவரை, புதிய டெக்னோ போவா 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி ஷூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு செகெண்டரி சென்சார் மற்றும் டூயல் LED ஃபிளாஷ் உடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் எல்இடி ப்ளாஷ் உடன் 8 மெகா பிக்சல் ஷூட்டரைக் கொண்டுள்ளது.

இது 6000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஸ்மார்ட்போன் 10W இல் ரிவர்ஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.

ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!

Tecno Pova 4 Pro போனில் இது ஒன்று தான் ஏமாற்றம்.!

Tecno Pova 4 Pro போனில் இது ஒன்று தான் ஏமாற்றம்.!

இது சார்ஜிங் மற்றும் டேட்டா எக்ஸ்சேஞ் அம்சத்திற்கு டைப்-சி போர்ட்டை வழங்குகிறது. இந்த சாதனம் ஹை-ரெஸ் ஆடியோவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பையும் கொண்டுள்ளது.

Tecno Pova 4 Pro ஸ்மார்ட்போன் Fluorite Blue வண்ண விருப்பத்தில் வருகிறது. இது டூயல் சிம், 4ஜி, வைஃபை, புளூடூத், என்எப்சி மற்றும் ஜிபிஎஸ் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

இது ஒரு 5ஜி போன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 5ஜி டிவைஸை எதிர்பார்த்தவர்களுக்கு இது ஒரு சிறிய ஏமாற்றத்தைத் தருகிறது.

புதிய Tecno Pova 4 Pro ஸ்மார்ட்போன் விலை என்ன?

புதிய Tecno Pova 4 Pro ஸ்மார்ட்போன் விலை என்ன?

இந்த புதிய Tecno Pova 4 Pro ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் வெறும் ரூ.21,500 என்ற விலையில் கிடைக்கும். இப்போதைக்கு, இந்த ஸ்மார்ட்போன் தற்போது பங்களாதேஷில் மட்டுமே கிடைக்கிறது.

பிற பகுதியில் இந்த டிவைஸ் எப்போது கிடைக்கும் என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்தியாவில் இந்த Tecno Pova 4 Pro தீபாவளிக்கு முன்னால் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Tecno Pova 4 Pro with 6000mAh Battery Launched Know The Price and Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X