ஜூன் 20: இந்தியாவில் 7000 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் Tecno Pova 3.! என்னென்ன அம்சங்கள்?
டெக்னோ நிறுவனம் சமீபத்தில் பல தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வரிசையில் வரும் ஜூன் 20-ம் தேதி புதிய டெக்கோ போவா 3 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

சிறந்த பேட்டரி பேக்கப்
குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதாவது இந்த சாதனம் 7000 எம்ஏஎச் பேட்டரி
ஆதரவுடன் வெளிவரும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. சிறந்த பேட்டரி பேக்கப் கொண்ட போன்களை தேடும் பயனர்களுக்கு இது
ஒரு அருமையான வாய்ப்பாகும்.

ஜூன் 20-ம் தேதி
டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் ஏற்கனவே பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் வரும் ஜூன் 20-ம் தேதி தான் அறிமுகம் செய்யப்படுகிறது. அதேபோல் இந்த சாதனம் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது டெக்கோ போவா 3 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

பெரிய டிஸ்பிளே
டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2460 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பெரிய டிஸ்பிளே வசதியுடன் இந்த சாதனம் வெளிவருவதால் பயன்படுத்த அருமையாக இருக்கும்.

மிகவும் எதிர்பார்த்த சிப்செட்
போவா 3 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஜி88 சிப்செட் வசதியுடன் Mali-G52 2EEMC2 ஆதரவும் உள்ளது. இந்த சிப்செட் கேமிங் பயனர்களுக்கு தகுந்தபடி இருக்கும். எனவே இதை நம்பி வாங்கலாம். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த HiOS இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் இந்த டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன்.

நிறங்கள் மற்றும் சேமிப்பு வசதி
இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. இதுதவிர மெமரி கார்டை பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய சாதனம் ஈகோ பிளாக், எலக்ட்ரிக் ப்ளூ மற்றும் டெக் சில்வர்நிறங்களில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அசத்தலான கேமராக்கள்
டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். அதேபோல் டூயல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது டெக்னோ போவா 3.

7000 எம்ஏஎச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனில் மிக முக்கிய அம்சம் பேட்டரி தான். அதாவது போவா 3 ஸ்மார்ட்போனில் 7000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. கண்டிப்பாக நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.

என்ன விலை?
மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி,புளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி போன்ற பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் இந்த சாதனம் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications