பேட்டரி 7000 எம்ஏஎச், கேமரா டிரிபிள் 50எம்பி- கசிந்த தகவல்: வேற லெவல் அம்சங்களோடு டெக்னோ போவா 3!

|

டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. இந்த சாதனமானது 7000 எம்ஏஎச் பேட்டரி, 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சாதனம் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பேக் செய்யப்பட்டிருக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

டெக்னோ போவா 3

டெக்னோ போவா 3

டெக்னோ கடந்த ஆண்டு போவா 2 ஸ்மார்ட்போனை உலகளவில் அறிவித்தது. தற்போது நிறுவனம் அதன் வரிசையில் டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. வரவிருக்கும் டெக்னோ போனின் சிறப்பம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. டெக்னோ போவா 3 சிறப்பம்சங்கள் டிப்ஸ்டர் பராஸ் குக்லானியின் தகவல்படி, டெக்னோ போவா 3 ஆனது 1080 × 2460 பிக்சல் தீர்மானம் கொண்ட பெரிய 6.9 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டாட் இன் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் வரும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஹூட்டின் தகவலின்படி இந்த சாதனம் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் ஆதரவோடு இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

இந்த சாதனம் கடந்தாண்டு டெக்னோ போவா 8 சாதனத்தை ஹீலியோ ஜி85 இயங்குதள ஆதரவோடு அறிமுகம் செய்தது. அதேபோல் டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக மெமரி விரிவாக்கம் செய்யலாம். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 8 எம்பி முன்புற கேமராவைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த சாதனம் குறைந்த ஒளி சூழலில் செல்பி எடுக்க உதவும் வகையில் இரட்டை ஃப்ளாஷ் ஆதரவுக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

மூன்று பின்புற கேமரா அமைப்பு

மூன்று பின்புற கேமரா அமைப்பு

வரவிருக்கும் போவா சாதனம் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் பொறுத்தப்பட்டிருக்கும் என டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி கொண்ட முதன்மை சென்சார் மற்றும் குவாட் எல்இடி ஃபிளாஷஅ ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் பிற சென்சார்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சாதனம் இரட்டை எல்இடி ஃபிளாஷ் ஆதரவோடு வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவு

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவு

டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் ஒப்பிடும் போது டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் ஆனது 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 7000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வரும் என தகவல் தெரிவிக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்

டெக்னோ போவா 2 சாதனம் 6.9 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2460 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. இநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் ஆதரவு, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு திறனைக் கொண்டிருக்கிறது. 256 ஜிபி வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. டெக்னோ போவா 2 ஸ்போர்ட் 48 எம்பி முதன்மை கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி குவாட் கேமரா அமைப்போடு வருகிறது. எல்இடி ப்ளாஷ் உடன் எச்டிஆர், பொக்கே, ஏஐ கேமரா, ஸ்லோ மோசன் வீடியோ ஆதரவுடன் இது வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனானது 8 எம்பி செல்ஃபி கேமரா உடன் டூயல் ப்ளாஷ் செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Tecno Pova 3 Smartphone Specs Leaked Via Online: 50 MP Triple Camera, 7000 mAh Battery

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X