Home
Mobile

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க., 7000 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் புதிய டெக்னோ ஸ்மார்ட்போன்.!

டெக்னோ நிறுவனம் மெல்ல மெல்ல சூப்பர் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது சிறந்த கேமரா வசதி, அருமையான சிப்செட் உட்பட பல சிறப்பு அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது டெக்னோ நிறுவனம். இந்நிலையில் டெக்கோ நிறுவனம் புதிய டெக்கோ போவா 3 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

டெக்னோ போவா 3

டெக்னோ போவா 3

இந்த டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை இன்னும் வெளியிடவில்லை அந்நிறுவனம். இருந்தபோதிலும் விரைவில் இந்த புதிய சாதனம் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் ஏற்கனவே
பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும்

ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும்

பிலிப்பைன்ஸில் டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனின் விலை PHP 8,999 (இந்திய மதிப்பில் ரூ.13,400) ஆக உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன்இந்தியாவில் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனின் அம்சங்களைசற்று விரிவாகப் பார்ப்போம்.

எல்சிடி டிஸ்பிளே

எல்சிடி டிஸ்பிளே

இந்த டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2460 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். 6.9-இன்ச் டிஸ்பிளே என்பதால் கேம் விளையாடஅருமையாக பயன்படும் இந்த புதிய ஸ்மார்ட்போன்.

மீடியாடெக் ஜி88 சிப்செட்

மீடியாடெக் ஜி88 சிப்செட்

டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஜி88 சிப்செட் வசதியுடன் Mali-G52 2EEMC2 ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இப்போது வரும் பட்ஜெட் போன்களில் இந்த சிப்செட் வசதிதான் அதிகம்உள்ளன. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த HiOS இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் இந்த டெக்னோ போவா 3 சாதனம்.

ஈகோ பிளாக், எலக்ட்ரிக் ப்ளூ

ஈகோ பிளாக், எலக்ட்ரிக் ப்ளூ

டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. இதுதவிர மெமரி கார்டை பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய சாதனம் ஈகோ பிளாக், எலக்ட்ரிக் ப்ளூ மற்றும் டெக் சில்வர் நிறங்களில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 50எம்பி பிரைமரி சென்சார்

50எம்பி பிரைமரி சென்சார்

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதாவது டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என மொத்தம்மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர டூயல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

7000 எம்ஏஎச் பேட்டரி

7000 எம்ஏஎச் பேட்டரி

டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனில் 7000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. கண்டிப்பாக நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதேபோல் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய சாதனம் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Tecno Pova 3 May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X