Home
Mobile

50MP கேமரா, 7000 mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட மிரட்டலான போனுக்கு விலைகுறைப்பு.!

கடந்த ஜூன் மாதம் 7000 எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி ரியர் கேமரா, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் அட்டகாசமான டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு தான் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அறிவிக்கப்பட்ட விலை குறைப்பு இதன் ஒரு வேரியண்டிற்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Tecno Pova 3 ஸ்மார்ட்போன் முன்பு ரூ.11,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த போனுக்கு ரூ.2000 விலை குறைக்கப்பட்டு ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்தது என்று தான் கூறவேண்டும். இப்போது இந்த டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

33W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட மிரட்டலான போனுக்கு விலைகுறைப்பு.!

டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் ஆனது 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1080x2460 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக கம்மி விலையில் ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன் தற்போது இதுதான். ஃபுல் எச்டி என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

இந்த டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன். குறிப்பாக கேமிங் வசதிக்கு இந்த பிராசஸர் அருமையாக உதவும். அதாவது கேமிங் ஆப்புகளைத் தடையின்றி பயன்படுத்த உதவுகிறது ஹீலியோ G88 பிராசஸர். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. பின்பு விரைவில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்மார்ட்போன்.

டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனில் 7000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாடவும், வீடியோக்களை பார்க்கவும் முடியும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.

டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் அருமையாகத் தான் உள்ளது. ஆனால் இது 5ஜி போன் கிடையாது. அதாவது 4ஜி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு ப்ளூடூத், வைபை, யுஎஸ்பி டைப் சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன். குறிப்பாக அருமையான அம்சங்களுடன் ஒரு 4ஜி போனை கம்மி விலையில் தேடும் பயனர்களுக்கு இந்த டெக்னோ போவா 3 போன் பயனுள்ள வகையில் இருக்கும்.

Best Mobiles in India

English summary
Tecno Pova 3 4GB RAM Price Slashed in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X