ரூ.10,999-விலையில் 7,000mAh பேட்டரி, 48எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அருமையான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் டெக்னோ போவா 2 சாதனம் ஆனது வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும்.

64ஜிபி மெமரி கொண்ட

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. ஆனால் இந்தியாவில் குறிப்பிட்ட நாட்களுக்கு இந்த சாதனம் சலுகை விலையில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 6.95-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.95-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போன் மாடல் 6.95-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,460 பிக்சல் தீர்மானம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளதுஇந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

Mi 11 Lite 4G இந்தியாவில் நிறுத்தப்பட்டதா? இதற்கு பதில் கம்மி விலையில் 5ஜி Mi 11 லைட் வெளிவருமா?Mi 11 Lite 4G இந்தியாவில் நிறுத்தப்பட்டதா? இதற்கு பதில் கம்மி விலையில் 5ஜி Mi 11 லைட் வெளிவருமா?

மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்

மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்

டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் Mali G52 GPUஆதரவும் உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு HiOS சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.

பூமியை நெருங்கும் சனிக்கோள்: வெறும் கண்களால் வானத்தை பார்த்தாலே தெரியும்- ஏதும் ஆபத்து இருக்கா?பூமியை நெருங்கும் சனிக்கோள்: வெறும் கண்களால் வானத்தை பார்த்தாலே தெரியும்- ஏதும் ஆபத்து இருக்கா?

48 மெகாபிக்சல்கள் கொண்ட பிரதான கேமரா

48 மெகாபிக்சல்கள் கொண்ட பிரதான கேமரா

48 மெகாபிக்சல்கள் கொண்ட பிரதான கேமராவுடன், 2 மெகாபிக்சல்கள் கொண்ட மேக்ரோ லென்ஸ், 2 மெகாபிக்சல்கள் கொண்ட டெப்த் சென்சார் மற்றும் எல்இடி ப்ளாஷ் உடன் AI புகைப்படம் எடுப்பதற்கான 2 மெகாபிக்சல்கள் சென்சார் ஆகியவற்றைக் கொண்டகுவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளதுஇந்த புதிய சாதனம். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.

 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி

டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

7000 எம்ஏஎச் பேட்டரி

7000 எம்ஏஎச் பேட்டரி

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பெரிய சைஸ் பேட்டரி போனில் இதுவும் ஒன்று எனக் கூறலாம். அதாவது 7000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

விரைவில் ஆன்லைன் டெலிவரி இப்படிதான்- உருவானது கேஸி ரோபோ: 5 கிலோமீட்டர் தூரத்தை 53 நிமிடத்தில் ஓடி அசத்தல்!விரைவில் ஆன்லைன் டெலிவரி இப்படிதான்- உருவானது கேஸி ரோபோ: 5 கிலோமீட்டர் தூரத்தை 53 நிமிடத்தில் ஓடி அசத்தல்!

E, Wi-Fi 802.11 ac (2.4GHz +

மேலும் இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5, GPS / GLONASS / Beidou, மைக்ரோ யூ.எஸ்.பி. போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Tecno Pova 2 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X