4 கேமரா.. 7000mAh பேட்டரி.. மலிவு விலையில் Tecno Pova 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?
டெக்னோ நிறுவனம் பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிதாக டெக்னோ போவா 2 (Tecno Pova 2) எனப்படும் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் அட்டகாசமான தோற்றத்துடன் 7000 எம்.ஏ.எச் சக்தி கொண்ட பெரிய சைஸ் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போன் தற்பொழுது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் இதன் விலை மற்றும் 7000 எம்.ஏ.எச் பேட்டரி தான். இது பற்றிய கூடுதல் விபரங்களைப் பார்க்கலாம்.

டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போன்
டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போன் ஒரே ஒரு ஸ்டோரேஜ் விருப்பத்துடன் மட்டுமே பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் PHP 7,990 என்ற விலையில் பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ .12,200 என்ற நம்ப முடியாத விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது போலார் சில்வர் நிறத்தில் மட்டும் வருகிறது.

டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்
டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போனில் 6.9 இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே 1கொடுக்கப்பட்டுள்ளது. இது 80 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் விகிதம் மற்றும் நிலையான 60 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஜோடியாக ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாகவும் ஸ்டோரேஜ் விரிவாக்கப்படு வசதியும் இதில் உள்ளது.

டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போனின் கேமரா விபரம்
கேமராவை பொறுத்தவரையில், இந்த புதிய டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல்கள் கொண்ட பிரதான கேமராவுடன், 2 மெகாபிக்சல்கள் கொண்ட மேக்ரோ லென்ஸ், 2 மெகாபிக்சல்கள் கொண்ட டெப்த் சென்சார் மற்றும் எல்இடி ப்ளாஷ் உடன் AI புகைப்படம் எடுப்பதற்கான 2 மெகாபிக்சல்கள் சென்சார் ஆகியவற்றைக் கொண்ட குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இந்த சாதனம், 8 மெகாபிக்சல்கள் கொண்ட செல்பி கேமரா சென்சாரை கொண்டுள்ளது.

பெரிய சக்தி கொண்ட பேட்டரி
இந்த டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட HiOS 7.6 இல் இயங்குகிறது. மேலும், இது 7000mAh பேட்டரி மூலம் 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பெரிய சைஸ் பேட்டரி போனில் இதுவும் ஒன்று என்பதை மறக்கவேண்டாம். இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் வருகிறது. இணைப்பு அம்சங்களில் இது இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5, GPS / GLONASS / Beidou, மைக்ரோ யூ.எஸ்.பி. போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

மலிவு விலையில் அற்புதமான சாய்ஸ் தான் இந்த டெக்னோ போவா 2
இந்தியாவில் இதன் அறிமுகம் இந்த மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.12,200 என்ற மலிவு விலையில் நான்கு கேமரா அமைப்புடன், 7000 எம்.ஏ.எச் சக்தி கொண்ட பெரிய சைஸ் பேட்டரி உடன் வாங்க கூடிய பெஸ்ட்டான ஸ்மார்ட்போன் மாடலாக இந்த புதிய டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படுகிறது. மலிவு விலையில் அணைத்து முக்கிய அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு டெக்னோ போவா 2 ஒரு அற்புதமான சாய்ஸ் ஆக இருக்கும்.


Click it and Unblock the Notifications