ஒத்த போனுக்கு மொத்த ஆர்டர்.. ரூ.15,999 போதும்.. 6500mAh பேட்டரி.. 45W சார்ஜிங். 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி (TECNO POP X 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிவிட்டது. பட்ஜெட் விலையில் அரிசோன்டல் கேமரா மட்டுமல்லாமல், 6500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 120 Hz டிஸ்பிளே போன்ற பீச்சர்கள் கிடைக்கிறது.
ஏப்ரல் 20ஆம் தேதி இந்திய மார்கெட்டில் டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகியது. ஏப்ரல் 24ஆம் தேதி அமேசான் தளத்தில் விற்பனை தொடங்க இருந்தது. ஆகவே, இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆகவும் உள்ளது.

இந்த விலையிலேயே அமேசான் தளத்தில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு ரூ,1,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே, இந்த தள்ளுபடி கிடைக்கும். மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் ரிப்பிள் கிரீன் (Ripple Green) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி அம்சங்கள் (TECNO POP X 5G Specifications): 6.78 இன்ச் (720 x 1576 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் கிடைக்கிறது. மேலும், ப்ரீலிங்க் கம்யூனிகேஷன் (FreeLink Communication), எல்லா ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (ELLA AI Voice Assistant) உள்ளிட்ட பீச்சர்களுடன் ஹைஓஎஸ் 16 (HiOS 16) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ இமேஜ் எக்ஸ்டெண்டர் (AI Image Extender) மற்றும் ஏஐ ஃபிளாஷ் ஸ்னாப் (AI Flash Snap) பீச்சர்களுடன் 13 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்களை கொடுத்துள்ளது.
மேலும், IP64 Pro ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரியை இந்த டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 8.18 எம்எம் தடிமன் கொடுத்துள்ளது. ஆகவே, ஸ்லிம் டிசைனில் எதிர்பார்க்க முடியாது. 210 கிராம் எடை கொண்டுள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட் கொண்டிருப்பதால், 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கிடைக்கிறது. மேலும், வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டிகள் இருக்கின்றன. ஏரோஸ்பேஸ் கிரேடு அலுமினியம் கேமரா டெக்கோவை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications