Home
Mobile

மிரட்டிவிட்டாப்ல.. ரூ.8,499 பட்ஜெட்ல SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. HD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டே அதிரும்படியான பட்ஜெட்டில் சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் கொண்ட 48 எம்பி மெயின் கேமரா மட்டுமல்லாமல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எச்டிபிளஸ் டிஸ்பிளே, 4 ஜிபி விரச்சுவல் ரேம் கொண்ட 4 ஜிபி ரேம், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி, ஆண்டாராய்டு 14 ஓஎஸ் கொண்ட டைமன்சிட்டி சிப்செட் போன்ற பக்கா பீச்சர்களை கொடுத்த டெக்னோ பாப் 9 5ஜி (TECNO POP 9 5G) போனின் விற்பனை தொடங்கிவிட்டது.

கேமரா பிரியர்களை பட்ஜெட்டில் தட்டித் தூக்கும்படி இந்த போனின் கேமரா பீச்சர்கள் வருகின்றன. ரூ.10000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு சோனி சென்சாருடன் கேமரா வரும் மாடல்களில் இதுவே அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. அதேபோல பிரீமியம் லுக் கொடுக்கும் டூயல் ரியர் கேமரா டிசைன் மற்றும் ஆரா எல்இடி லைட்டை பேக் செய்துள்ளது.

மிரட்டிவிட்டாப்ல.. ரூ.8499 பட்ஜெட்ல SONY கேமரா.. 5000mAh பேட்டரி போன்!

டெக்னோ பாப் 9 5ஜி அம்சங்கள் (TECNO POP 9 5G Specifications): இந்த டெக்னோவில் எச்டிபிளஸ் (HD+) மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.6 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. டாட்-இன் டிசைன் (Dot-In Design) கொண்டிருக்கிறது. ஏனென்றால், லேட்டஸ்ட் டெக்னோ மாடல்களில் வரும் டைனாமிக் போர்ட் (Dynamic Port) பீச்சர் வருகிறது.

1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) மற்றும் 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் வருகிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது.

இதுபோக அடிமட்ட பட்ஜெட்டிலும் ஐஆர் சென்சார் (IR Sensor) வருகிறது. அதேபோல ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. ஹாய்ஓஎஸ் 14 (HiOS 14) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வருகிறது. 4 வருடங்களுக்கு லாக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் கொடுக்குமென்று டெக்னோ தெரிவிக்கிறது.

இந்த டெக்னோ பாப் 9 5ஜி போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டைப்-சி போர்ட் (Type-C Port) வருகிறது. IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கிடைக்கிறது. 189 கிராம் எடை மற்றும் 8 எம்எம் தடிமன் வருகிறது.

பட்ஜெட் மாடல்களில் அதிகம் வரும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த டெக்னோவின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.9,499 ஆக இருக்கிறது. அதேபோல 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் விற்பனை தொடங்கி இருக்கிறது.

ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.8,499 ஆரம்ப விலையில் சோனி சென்சார் கேமரா கொண்ட இந்த டெக்னோ பாப் 9 5ஜி போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். மிட்நைட் ஷேடோ (Midnight Shadow), அசுர் ஸ்கை (Azure Sky) மற்றும் அரோரா கிளவுட் (Aurora Cloud) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO POP 9 5G With 48MP Camera 4GB RAM Sale Under Rs 9000 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X