2 Free Skin-களுடன் விற்பனை ஆரம்பம்.. ஆளுக்கு 2 ஆர்டர் போடும் விலையில் 16GB ரேம் கொண்ட 5G போன்!
2 ஃப்ரீ ஸ்கின் (2 Free Skins), 16ஜிபி வரைவிலான ரேம் (Up to 16GB RAM) என.. கடந்த சில நாட்களாக அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ஹைலைட் செய்யப்பட்டு கொண்டிருந்த ஒரு பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இன்று (ஜனவரி 8 ஆம் தேதி) மதியம் 12 முதல் விற்பனையை தொடங்கியது. அதென்ன மாடல்? இதன் விலை நிர்ணயம் என்ன? என்னென்ன அம்சங்ககளை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது டெக்னோ பாப் 9 5ஜி (Tecno POP 9 5G) ஸ்மார்ட்போனின் புதிய 8ஜிபி ரேம் ஆப்ஷனை (New 8GB RAM Option) பற்றித்தான். இதே ஸ்மார்ட்போன் கடந்த 2024 செப்டம்பரில், 4ஜிபி ரேம் + 64ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகமாகி இருந்தது. தற்போது இதே ஸ்மார்ட்போனின் புதிய 8ஜிபி ரேம் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்கும் வந்துள்ளது.

8ஜிபி ரேம் உடனான டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: டெக்னோ பாப்பா 9 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ,10,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா (Amazon India) வழியாக வாங்க கிடைக்கிறது.
முன்னரே குறிப்பிட்டபடி டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 2 இலவச ஸ்கின்களும் அனுப்பி வைக்கப்படும். ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் ஒரிஜினல் கலர் ஆப்ஷன்கள் - மிட்நைட் ஷேடோ (Midnight Shadow), அஸூர் ஸ்கை (Azure Sky) மற்றும் அரோரா க்ளவுட் (Aurora Cloud) ஆகியவைகள் ஆகும்.
முன்னதாக அறிமுகமான 4ஜிபி ரேம் வேரியண்ட்களில் 8ஜிபி வரையிலான மெமரி ஃப்யூஷன் தொழில்நுட்பத்தின் (Memory Fusion Technology) கீழ் அதிகபட்சம் 12ஜிபி வரையிலான ரேம் கிடைக்கும். அதுவே புதிய 8ஜிபி ரேம் ஆப்ஷனின் கீழ் அதே 8ஜிபி மெமரி ஃப்யூஷன் டெக்னாலஜியின் கீழ் மொத்தம் 16ஜிபி ரேம் கிடைக்கும்.
டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனின் டிசைன்: இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனின் பாடி ஆனது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் (IP54 Rating Dust and Water Proof) உடன் வருகிறது. இந்த ரேட்டிங்கால்லேசான தூறல்கள் மற்றும் நீர் தெறிப்பிற்கு எதிராக செயல்பட முடியும். அதற்கு மேலான வாட்டர் ஃப்ரூப்ங்கை எதிர்பாக்க கூடாது.
டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.6 இன்ச் எல்சிடி பேனலை (66.-inch LCD Display) கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது மீடியாடெக் டைமன்சிட்டி 6030 சிப்செட் (MediaTek Dimensity 6300 SoC) உடன் வருகிறது.
முன்னரே குறிப்பிட்டபடி டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் (128B Internal Storage) உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது 48எம்பி சோனி ஏஐ ரியர் கேமரா (48MP AI Rear Camera) மற்றும் முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமராவை (8MP Selfie Camera) கொண்டுள்ளது
பேட்டரி மற்றும் பாஸ்ட் சர்ஜிங்கை பொறுத்தவரை, டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போனில் என்எப்சி (NFC) ஆதரவு மற்றும் டூயல் டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்களையும் (Dual Dolby Atmos Speakers) கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








