என்னது ரூ.10,999 தானா.. 5ஜி, 16GB ரேம், 48MP சோனி கேமரா, 5000mAh, NFC, டூயல் ஸ்பீக்கர், IP54.. எந்த மாடல்?
ஏற்கனவே இந்தியாவில்.. 5ஜி ஆதரவுடன் ரூ.10,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் வரும் ஸ்மார்ட்போன்களுக்கு செம்ம டிமாண்ட் இருக்கிறது. இதற்கிடையில் 5ஜி ஆதரவுடன் சேர்த்து விர்ச்சுவல் ரேம் (Virtula RAM) அம்சத்தின் கீழ் 16ஜிபி ரேம், ஏஐ ஆதரவு கொண்ட 48எம்பி சோனி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, என்எப்சி, டூயல் ஸ்பீக்கர், ஐபி54 ஆகிய அம்சங்களுடன் ஒரு போன் கிடைக்கிறது!
நாம் இங்கே பேசுவது - டெக்னோ பாப் 9 5ஜி (Tecno POP 9 5G) ஸ்மார்ட்போனின் புதிய 8ஜிபி ரேம் வேரியண்ட்டை பற்றித்தான். கடந்த 2024 செப்டம்பரில் அறிமுகமாகும் போது இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் மட்டுமே வெளியானது: 4ஜிபி ரேம் + 64ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி. இவைகள் முறையை ரூ.8,499-க்கும், ரூ.9,499-க்கும் அறிமுகமாகின.

தற்போது இந்த ஸ்மார்ட்போனின் புதிய 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில் லைவ் ஆகியுள்ள ஒரு பிரத்யேக மைக்ரோசைட்டின்படி, 8ஜிபி ரேம் உடன் வரும் டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ,10,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
4ஜிபி ரேம் வேரியண்ட்களுக்கும், 8ஜிபி ரேம் வேரியண்ட்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால்.. 4ஜிபி மாடல்கள் ஆனது 8ஜிபி வரையிலான மெமரி ஃப்யூஷன் (விர்ச்சுவல் ரேம்) தொழில்நுட்பத்துடன் சேர்த்து மொத்தம் 12ஜிபி வரையிலான ரேம்-ஐ வழங்குகிறன. புதிய 8ஜிபி ரேம் மாடலானது 8 ஜிபி வரை மெமரி ஃப்யூஷன் டெக்னாலஜியின் (Memory Fusion Technology) கீழ் மொத்தம் 16ஜிபி அளவிலான ரேம்-ஐ வழங்குகின்றன.
புதிய 8ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது ஜனவரி 8 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் 2 இலவச ஸ்கின்களும் அனுப்பி வைக்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ஷேடோ ( Midnight Shadow), அஸூர் ஸ்கை (Azure Sky) மற்றும் அரோரா க்ளவுட் (Aurora Cloud) என மொத்தம் 3 ஒரிஜினல் கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.
டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் அம்சங்கள்: வடிவமைப்பை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனின் பாடி ஆனது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் (IP54 Rating) உடன் வருகிறது. டெக்னோவின் கூற்றுப்படி இது லேசான தூறல்கள் மற்றும் நீர் தெறிப்பிற்கு எதிராக செயல்படும்.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6 இன்ச் எல்சிடி பேனலை கொண்டுள்ளது. ஒப்பீட்டளவில், டெக்னோ பாப் 8 (Tecno POP 8) ஸ்மார்ட்போனில் நாம் கண்ட 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளேவை விட, இது ஒரு நல்ல மேம்படுத்தலாகும்.
சிப்செட்டை பொறுத்தவரை டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6030 சிப்செட் (MediaTek Dimensity 6300 SoC) உடன் வருகிறது. இது 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. யுனிசாக் டி606 சிப்செட் கொண்டு இயக்கப்படும் டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது இது ஒரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாகும்.
கேமராக்களை பொறுத்தவரை, டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனில் 48எம்பி சோனி ஏஐ ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. ஒப்பிடுகையில், டெக்னோ பாப் ஸ்மார்ட்போனில் 12எம்பி பிரைமரி கேமரா தான் இருந்தது. ஆனால் அதுவும் 8எம்பி செல்பீ கேமராவையே கொண்டிருந்தது.
பேட்டரி மற்றும் பாஸ்ட் சர்ஜிங்கை பொறுத்தவரை, டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இந்த போன் என்எப்சி (NFC) ஆதரவுடன் வருகிறது. ரூ.10,999 என்கிற விலையில் என்எப்சி ஆதரவு இருப்பது அரிதான விஷயமாகும். கடைசியாக இது டூயல் டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்களையும் (Dual Dolby Atmos Speakers) கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








