Home
Mobile

அப்படி போடு.. ரூ.8,499 பட்ஜெட்ல சோனி கேமரா.. 5000mAh பேட்டரி.. அறிமுகமானது புது TECNO போன்.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனம் இன்று டெக்னோ பாப் 9 5ஜி (TECNO POP 9 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சோனி கேமரா, 5000mAh பேட்டரி, டால்பி அட்மாஸ் உள்ளிட்ட அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது டெக்னோ பாப் 9 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

டெக்னோ பாப் 9 5ஜி அம்சங்கள் (TECNO POP 9 5G Specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1612 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

அப்படி போடு.. அறிமுகமானது புது TECNO போன்.. எந்த மாடல்?

ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் இந்த புதிய டெக்னோ பாப் 9 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் HiOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) கொண்டுள்ளது இந்த போன். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். மேலும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor)கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் வசதியும் இந்த போனில் உள்ளது.

டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி ஐஎம்எக்ஸ்582 (Sony IMX582) பிரைமரி கேமரா மற்றும் ஏஐ செகண்டரி லென்ஸ் ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல சிறப்பான கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

IP54 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and Splash resistant) கொண்டுள்ளது இந்த டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 500எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி போடு.. அறிமுகமானது புது TECNO போன்.. எந்த மாடல்?

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி ((Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஸ்ாமர்ட்போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 189 கிராம் ஆகும்.

64ஜிபி மெமரி கொண்ட டெக்னோ பாப் 9 5ஜி போனின் விலை ரூ.9,499-ஆக உள்ளது. இதன் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.9,999-ஆக உள்ளது. மிட்நைட் ஷேடோ, அஸூர் ஸ்கை மற்றும் அரோரா கிளவுட் நிறங்களில் இந்த போனை வாங்கலாம். வரும் அக்டோபர் 7-ம் ததி அமேசான் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.8,499 விலையில் இந்த போனை வாங்கிவிட முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO POP 9 5G Launched in India: check specifications, price, sale date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X