Home
Mobile

சீன நிறுவனத்தையே மிரட்டிவிட்டாப்ல.. ரூ.10,000 விலைக்குள் இப்படியொரு 5G மொபைலா? எந்தவொரு போனிலும் இல்லாத அம்சம்

தற்போதைய நிலவரத்தின் படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் எந்தவொரு ஸ்மார்ட்போனிலும் இல்லாத அம்சங்களை பேக் செய்த பெஸ்ட் 5ஜி மொபைல் (5G Mobile) சாதனமாக டெக்னோ பாப் 9 5ஜி (Tecno Pop 9 5G) பார்க்கப்படுகிறது. காரணம், இது ரூ. 10,000 விலைக்குள் எந்தவொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் வழங்க முடியாத அம்சங்களை இப்போது வழங்கி அசத்தியுள்ளது. ரூ. 10,000 விலையை விட குறைந்த விலையில் ஒரு பெஸ்ட் 5G போன் வாங்க ஆசையா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது.

5ஜி தொழில்நுட்பம் (5G Technology) அறிமுகம் செய்யப்பட்டு ஏறக்குறைய 2 வருடங்கள் கடந்துவிட்டது. இருப்பினும், இந்த தொழில்நுட்பத்தை சாமானியர்களால் முழுமையாக பயன்படுத்த முடியாமல் போனது. காரணம், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்துடன் இயங்கும் சாதனங்களை ரூ. 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட விலை புள்ளியில் மட்டுமே தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றனர். மலிவு விலையில் 5ஜி கிடைத்தாலும், அதில் சில அம்சங்கள் மிஸ் ஆகிக்கொண்டே இருந்தது.

சீன நிறுவனத்தையே மிரட்டிவிட்டாப்ல.. ரூ.10000 விலையில் இப்படியா?

மலிவு விலையில் 5ஜி மொபைல் கொடுப்பதுடன், அதில் அட்டகாசமான அம்சங்களை எந்தவித குறையும் இல்லாமல் வழங்க முன்வந்த நிறுவனம் தான் டெக்னோ (Tecno) பிராண்ட். டெக்னோவின் சமீபத்திய அறிமுகமான Tecno Pop 9 5G ஸ்மார்ட்போன் சாதனம் மக்களின் எதிர்பார்ப்பை ரூ. 10,000 விலைக்குள் பூர்த்தி செய்துள்ளது. இந்தியாவின் மிகவும் மலிவான 5ஜி போன் (Budget 5G phone) என்ற பெருமையுடன். மக்களுக்கு சிறந்த போனை உருவாக்கியுள்ளது.

டெக்னோ பாப் 9 5ஜி (Tecno Pop 9 5G) ஸ்மார்ட்போனை நிறுவனம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெறும் ரூ. 9499 என்ற விலையில் அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த போனிற்கு போட்டியாக எந்தவொரு போனும் சந்தைக்குள் நுழையாமல் இருந்தது, இப்போது இதை சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி A4 5ஜி (Redmi A4 5G) சாதனம் எதிர்கொள்ள தயாராகி வருவது போல் தெரிகிறது.

இருப்பினும், மிகப்பெரிய நிறுவனமான சியோமி கூட வழங்க முடியாத அம்சங்களை இந்த Tecno Pop 9 5G வழங்குகிறது என்பதே உண்மையாகும். அது என்ன என்பதை இப்போது பார்க்கலாம். Tecno Pop 9 5G போனில் NFC தொழில்நுட்பம் பயன்படுத்த கிடைக்கிறது. ரூ. 10,000 பட்ஜெட் செக்மென்ட்டில் உள்ள எந்தவொரு போனிலும் NFC அம்சம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது நியர்பை பேமெண்ட் மற்றும் ஷேரிங் செய்ய அனுமதிகரித்து.

அடுத்தபடியாக, இந்த போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 SoC) வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் வழக்கமாக ரூ.15,000-திற்கு மேற்பட்ட செக்மென்ட் போன்களில் மட்டுமே காணப்படும் சிப்செட்டாக இருக்கிறது. இதை டெக்னோ நிறுவனம் அதன் 9000 ரூபாய் போனில் வழங்கி, மிகவும் சக்தி வாய்ந்த மலிவு விலை போனாக விற்பனை செய்வது கவனிக்கத்தக்கது. இந்த விலைக்கு இது புதுமையான வடிவமைப்பியும் வழங்குகிறது.

இதுவரை எந்தவொரு நிறுவனமும் செய்யாத செயலாக, அதன் Tecno Pop 9 5G போனுடன் நிறுவனம் இரண்டு கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஸ்கின் ஸ்டிக்கர்களை (Skin stickers) வழங்குகிறது. இதன் மூலம் Tecno Pop 9 5G போனின் தோற்றத்தை மாற்றிக்கொள்ளலாம். இது இலவசமாக கிடைக்கிறது. இது 6.6" இன்ச் கொண்ட 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate) LCD டிஸ்பிளேவை (Display) வழங்குகிறது.

இது டால்பி அட்மோஸ் டூயல் ஸ்டீரியோ (Dolby Atmos dual stereo speaker) சப்போர்ட் உடன் ரூ. 10,000 விலைக்குள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 48MP ரியர் கேமரா 8MP செல்பி கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 18W சார்ஜிங் என்று பல அம்சங்களை வழங்கி அசத்துகிறது இந்த Tecno Pop 9 5G.

Best Mobiles in India

English summary
Tecno Pop 9 5G is a Super COOL Unique Budget Smartphone Under Rs 10000 Segment In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X