செப்.24-ல் வரும் புது TECNO 5ஜி போன்.. மலிவு விலை.. சோனி கேமரா.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்?
டெக்னோ நிறுவனம் தனது டெக்னோ பாப் 9 5ஜி (TECNO POP 9 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய வரும் செப்டம்பர் 24-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக சோனி கேமரா, 5000mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்களுடன் மலிவு விலையில் இந்த போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
டெக்னோ பாப் 9 5ஜி அம்சங்கள் (TECNO POP 9 5G Specifications): பஞ்ச் ஹோல் கட்அவுட் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட பிளாட் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த புதிய டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 900 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி எஸ்ஒசி (MediaTek Dimensity 6300 5G SoC) சிப்செட் உடன் இந்த புதிய டெக்னோ பாப் 9 5ஜி போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த புதிய டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். மேலும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted Fingerprint Sensor) கொண்டு இந்த போன் அறிமுகமாகும்.
டெக்னோ பாப் 9 5ஜி பின்புறம் 48எம்பி சோனி ஐஎம்எக்ஸ்582 (Sony IMX582) கேமரா வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும்.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டால்பி அட்மாஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் வசதியும் இந்த போனில் உள்ளது. அதேபோல் இந்த போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54-ரேட்டிங்கையும் (IP54 rating) கொண்டுள்ளது இந்த போன்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் இந்த பேட்டரியை சாரஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டெக்னோ நிறுவனம்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.9,499 விலையில் அறிமுகமாகும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக அமேசான் தளத்தில் இந்த புதிய போன் விற்பனைக்கு வரும்.
photo credit: amazon, tecno


Click it and Unblock the Notifications