முரட்டு அடியா இருக்கே.. வெறும் ரூ.6,499 க்கு 6GB ரேம், 5000mAh பேட்டரி, IP54 ரேட்டிங், 6.67-இன்ச் டிஸ்பிளே!
என்னப்பா இப்படி இறங்கிட்டீங்க.. ரூ.4,500 க்கு பீச்சர் போன் விற்கும் காலத்தில் ரூ.6,499 க்கு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து.. மொத்த இந்திய மார்க்கெட்டையும் உலுக்கி விட்டீங்களேப்பா.. என்று கேட்கும்படியாக டெக்னோ (Tecno) நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
டெக்னோ பாப் 9 4ஜி (Tecno POP 9 4G) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம், 5000எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ ஜி50, 13-மெகாபிக்சல் ரியர் கேமரா, 8-மெகாபிக்சல் செல்பீ, ஐபி54 ரேட்டிங், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் ஹைஓஎஸ் 14 போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான டெக்னோ பாப் 9 5ஜி (Tecno POP 9 5G) வேரியண்ட் உடன் இணைகிறது.

டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 720 x 1,600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 480 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 263 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 20:09 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடனான 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது 12 என்எம் மீடியாடெக் ஹீலியோ ஜி50 சிப்செட்டை (12nm MediaTek Helio G50 chipse) கொண்டுள்ளது. இந்த சிப்செட் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டார்ஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கூடுதலாக 3ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் விரிவாக்கத்தையும் (Virtual RAM expansion) ஆதரிக்கிறது. இதன் மூலம் டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 6ஜிபி ஆக எக்ஸ்டெண்ட் செய்ய முடியும்.
ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைஓஎஸ் 14 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் (HiOS 14 out-of-the-box) மூலம் இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை இதில் 4எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (4x digital zoom) மற்றும் 1080பி வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு (1080p video recording support) கொண்ட 13 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா யூனிட் உள்ளது. முன் கேமராவில் 8 மெகாபிக்சல் சென்சார் உள்ளது, இது 1080பி வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது.
பேட்டரியை பொறுத்தவரை இது யூஎஸ்பி டைப்-சி போர்ட் வழியாக 15W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது டிடிஎஸ் ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் யூனிட்டை (DTS-backed dual stereo speaker unit) கொண்டுள்ளது. மேலும் ஐஆர் ரிமோட் கண்ட்ரோலுக்கான (IR remote control) ஆதரவு, தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் (IP54 Rating)கொண்டுள்ளது
டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 3ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ6,699 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது ரூ.200 பேங்க் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெக்னோ பாப் 9 4ஜி போனின் விலையை ரூ.6,499 ஆக குறைக்க முடியும்
டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் இந்தியா (Amazon India) வழியாக நவம்பர் 26 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும். இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்: கிளிட்டரி ஒயிட், லைம் கிரீன் மற்றும் ஸ்டார்ட்ரெயில் பிளாக்.


Click it and Unblock the Notifications