Home
Mobile

நவ.22 முதல் ஆர்டர் குவியும்.. ரூ.7999 க்கு 6GB ரேம், DTS டூயல் ஸ்பீக்கர், IP54 ரேட்டிங், IR ரிமோட் கண்ட்ரோல்!

ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போனை தேடும் அனைவரும், அடுத்த சில நாட்களுக்கு கொஞ்சம் அமைதியாக இருக்கவும். ஏனென்றால் 6ஜிபி விர்ச்சுவல் ரேம், 5000எம்ஏஎச் பேட்டரி, டிடிஎஸ் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் , ஐஆர் ரிமோட் கண்ட்ரோல் உட்பட பல முக்கிய அம்சங்களை கொண்ட ஒரு புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் நவம்பர் 22 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகிறது.

அது டெக்னோ பாப் 9 4ஜி (Tecno Pop 9 4G) ஸ்மார்ட்போனாகும். நவம்பர் 22 என்கிற வெளியீட்டு தேதியோடு சேர்த்து டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் கலர் ஆப்ஷன்களும்.. டிஸ்பிளே, சிப்செட், கேமரா போன்ற முக்கிய அம்சங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நவ.22 முதல் ஆர்டர் குவியும்.. டெக்னோ பாப் 9 4ஜி!

இந்த 4ஜி மாடல் ஆனது கடந்த செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட டெக்னோ பாப் 9 5ஜி (Tecno POP 9 5G) மாடலுடன் இணையும் என்பதில் சந்தேகமே வேண்டாம். மேலும் 5ஜி வேரியண்ட்டின் பேஸிக் (4ஜிபி + 64ஜிபி) ஆப்ஷன் ரூ.9,499-க்கு அறிமுகமானதால், 4ஜி வேரியண்ட் ரூ.8000-க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. இது ரூ.7,999-க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் இந்தியா வலைதளத்தின் மைக்ரோசைட் (Amazon India Microsite) வழியாக டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது கிளிட்டரி ஒயிட் (Glittery White), லைம் க்ரீன் (Lime Green) மற்றும் ஸ்டார்ட்ரையல் பிளாக் (Startrail Black) ஆகிய 3 கலர்களில் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுவாரசியாக டெக்னோ பாப் 9 5ஜி வேரியண்ட்டை போலவே 4ஜி வேரியண்ட் உடனும் இலவச போன் ஸ்கின்கள் (Complimentary phone skins) கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம்பெறும்? டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90 Hz Refresh Rate) உடனான 6.67 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை (6.67-inch HD+ Display) கொண்டிருக்கும்.

சிப்செட்டை பொறுத்தவரை இது மீடியாடெக் ஹீலியோ ஜி50 சிப்செட் (MediaTek Helio G50 Chipset) உடன் வரும். மேலும் இது 6ஜிபி வரையிலான டைனமிக் ரேம் (6GB of dynamic RAM) மற்றும் 64ஜிபி வரையிலான ஆன்போர்ட் ஸ்டோரேஜ் (64GB of onboard storage) உடன் வருவதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை 13 மெகாபிக்சல் மெயின் ரியர் கேமராவுடன் (13MP Main rear camera) வரும் , பேட்டரியை பொறுத்தவரை இது 5000mAh பேட்டரியை கொண்டிருக்கும். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் (IP54-rated build for dust and splash resistance) கட்டமைப்பை கொண்டிருக்கும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐஆர் ரிமோட் கண்ட்ரோலை (IR Remote Control) ஆதரிக்கும் மற்றும் டிடிஎஸ் ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் யூனிட்டையும் (DTS-backed dual stereo speaker unit) கொண்டிருக்கும். கடைசியாக மற்றும் முக்கியமாக டெக்னோ நிறுவனம் அதன் பாப் 9 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 3 வருட கால லேக்-ஃப்ரீ செயல்திறனை (Lag-free performance) வழங்கும் என்று கூறுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Pop 9 4G With 6GB RAM IP54 IR Remote control Under Rs 10000 India Launch on November 22
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X