சத்தமின்றி அறிமுகமானது அசத்தலான டெக்னோ போன்.. டூயல் கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
டெக்னோ நிறுவனம் டெக்னோ பாப் 8 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த புதிய டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
புதிய டெக்னோ பாப் 8 (Tecno Pop 8) ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 720 x 1612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நோக்கியா ஸ்மார்ட்போன்களில் அதிகம் இடம்பெறும் சிப்செட் வசதி தான் இந்த டெக்னோ பாப் 8 போனிலும் உள்ளது. அதாவது டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் ஆனது யுனிசோக் டி606 சிப்செட் (Unisoc T606 chip) வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
யுனிசோக் டி606 சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் ( Android 13 Go edition) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டெக்னோ பாப் 8 போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

13எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.
இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளது. 4ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (microSD card slot) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
மிஸ்டரி ஒயிட், அல்பெங்லோ கோல்ட், மேஜிக் ஸ்கின் (லெதர் பேக்) மற்றும் கிராவிட்டி பிளாக் போன்ற நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் டிடிஎஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்களும் இந்த போனில் உள்ளது. எனவே டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் சார்ஜிங் 10W charging) வசதியும் உள்ளது. மேலும் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.
ஜிபிஎஸ், வைஃபை, எப்எம் ரேடியோ, புளூடூத், ஒடிஜி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனால் டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை தேதியை வெளியிடவில்லை டெக்னோ நிறுவனம். இருந்தபோதிலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications