மார்க்கெட்டே திணறப்போகுது.. வெறும் ரூ.7000 போதும்.. 5000mAh பேட்டரி.. 6.6-இன்ச் டிஸ்பிளே.. எந்த போன்?
டெக்னோ நிறுவனம் டெக்னோ பாப் 8 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் 2024 ஜனவரி 3-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன் ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.7000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு ஆன்லைனில் வெளியான இந்த அசத்தலான டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

டெக்னோ பாப் 8 அம்சங்கள் (Tecno Pop 8 specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன். மேலும் 720 x 1612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் நோக்கியா ஸ்மார்ட்போன்களில் அதிகம் இடம்பெறும் சிப்செட் வசதி தான் இந்த டெக்னோ பாப் 8 போனிலும் உள்ளது. அதாவது டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் ஆனது யுனிசோக் டி606 சிப்செட்(Unisoc T606 chip) வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் இந்த போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் ( Android 13 Go edition) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டெக்னோ பாப் 8 போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டெக்னோ நிறுவனம்.
இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
4ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ( Android 13 Go edition) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்மார்ட்போன்.
இந்த போன் மிஸ்டரி ஒயிட், அல்பெங்லோ கோல்ட், மேஜிக் ஸ்கின் (லெதர் பேக்) மற்றும் கிராவிட்டி பிளாக் போன்ற நிறங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிடிஎஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்களும் இந்த போனில் உள்ளது. எனவே டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் சார்ஜிங் (10W charging) வசதியும் உள்ளது. மேலும் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
குறிப்பாக ஜிபிஎஸ், வைஃபை, எப்எம் ரேடியோ, புளூடூத், ஒடிஜி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கம்மி விலையில் இந்த டெக்னோ பாப் 8 போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








