இதுதான் நெத்தியடி.. ரூ.5,999 போதும்.. LCD டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. DTS ஆடியோ.. எந்த போன்?
டெக்னோ நிறுவனம் டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எல்சிடி டிஸ்பிளே, 5000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது டெக்னோ பாப் 8 மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.
டெக்னோ பாப் 8 அம்சங்கள் (Tecno Pop 8 Specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் (HD+) எல்சிடி டிஸ்பிளே (LCD display) வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன். மேலும் 720 x 1612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நோக்கியா ஸ்மார்ட்போன்களில் அதிகம் இடம்பெறும் சிப்செட் வசதி தான் இந்த டெக்னோ பாப் 8 போனிலும் உள்ளது. அதாவது டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் ஆனது யுனிசோக் டி606 (Unisoc T606 chip) சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் இந்த போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
இதுதவிர மாலி - ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். 4ஜிபி ரேம் (4ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது. இந்த போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
HiOS 13.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன்( Android 13 Go edition) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டெக்னோ பாப் 8 போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டெக்னோ நிறுவனம்.
டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் 12எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் சார்ஜிங் (10W charging) வசதியும் உள்ளது. மேலும் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

டூயல் சிம், 4ஜி, ஜிபிஎஸ், வைஃபை, எப்எம் ரேடியோ, புளூடூத், ஒடிஜி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன். மிஸ்டரி ஒயிட் (Mystery White), அல்பெங்லோ கோல்ட் (Alpenglow Gold), மற்றும் கிராவிட்டி பிளாக் (Gravity Black) விற்பனைக்கு வரும்.
டிடிஎஸ் ஆடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக வங்கி சலுகையுடன் சேர்த்து இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போனை ரூ.5,999 விலையில் வாங்க முடியும். மேலும் இந்த போனின் விற்பனை வரும் ஜனவரி 9-ம் தேதி அமேசானில் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications








