Home
Mobile

வெறும் ரூ.7,000 போதும்.. டூயல் கேமரா.. 6.6-இன்ச் டிஸ்பிளே.. வருகிறது புது Tecno போன்.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனம் இந்தியாவில் டெக்னோ பாப் 8 எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த புதிய டெக்னோ பாப் 8 போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே விலை மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

இப்போது டெக்னோ பாப் 8 (Tecno Pop 8) ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது 6.6-இன்ச் HD+ எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன். மேலும் 720 x 1612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

6.6-இன்ச் டிஸ்பிளே.. வருகிறது புது Tecno போன்.. எந்த மாடல்?

அதேபோல் நோக்கியா ஸ்மார்ட்போன்களில் அதிகம் இடம்பெறும் சிப்செட் வசதி தான் இந்த டெக்னோ பாப் 8 போனிலும் உள்ளது. அதாவது டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் ஆனது யுனிசோக் டி606 சிப்செட் (Unisoc T606 chip) வசதியை அடிப்படையாகக் கொண்டு அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக யுனிசோக் டி606 சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 ( Android 13 Go edition) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டெக்னோ பாப் 8 போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

6.6-இன்ச் டிஸ்பிளே.. வருகிறது புது Tecno போன்.. எந்த மாடல்?

டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் பின்புற பகுதி ஐபோன் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போன் எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட டூயல் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது. அதாவது 13 மெகாபிக்சல் கேமரா + ஏஐ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ பாப் 8 போன்.

எனவே டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் இருப்பதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (microSD card slot) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மிஸ்டரி ஒயிட், அல்பெங்லோ கோல்ட், மேஜிக் ஸ்கின் (லெதர் பேக்) மற்றும் கிராவிட்டி பிளாக் போன்ற நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும்.

6.6-இன்ச் டிஸ்பிளே.. வருகிறது புது Tecno போன்.. எந்த மாடல்?

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் சார்ஜிங் ( 10W charging) வசதியும் உள்ளது. அதேபோல் கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சென்சார் ஆதரவுகளுடன் டெக்னோ பாப் 8 போன் அறிமுகமாகும்.

குறிப்பாக வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். அதேபோல் ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ரூ.6,999 எனும் ஆரம்ப விலையில் டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Pop 8 India price and specifications leaked online: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X