Home
Mobile

இதைவிட கம்மி விலையில் புதிய போன் கிடைக்காது.. LCD டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனம் கடந்த வாரம் டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது எல்சிடி டிஸ்பிளே, 5000எம்ஏஎச் பேட்டரி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. டெக்னோ பாப் 8 போனின் விற்பனை ஆனது இன்று மதியம் அமேசான் தளத்தில் தொடங்குகிறது.

அதாவது அமேசாதன் தளத்தில் இன்று மதியம் 12 மணிக்கு இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை, ஆஃபர்கள் மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

இதைவிட கம்மி விலையில் புதிய போன் கிடைக்காது..  எந்த மாடல்?

டெக்னோ பாப் 8 விலை: இந்தியாவில் டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் ரூ.6,499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த போனின் அறிமுக சலுகையாக ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போனை இன்று ரூ.5999-க்கு வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெக்னோ பாப் 8 அம்சங்கள் (Tecno Pop 8 Specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் (HD+) எல்சிடி டிஸ்பிளே (LCD display) வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன். மேலும் 720 x 1612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் ஆனது யுனிசோக் டி606 (Unisoc T606 chip) சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் இந்த போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் மாலி - ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

4ஜிபி ரேம் (4ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த டெக்னோ பாப் 8 போன் மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

குறிப்பாகHiOS 13.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன்( Android 13 Go edition) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டெக்னோ பாப் 8 போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் டிடிஎஸ் ஆடியோ ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன.

12எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் . எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது இந்த போன்.

இதைவிட கம்மி விலையில் புதிய போன் கிடைக்காது..  எந்த மாடல்?

அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் சார்ஜிங் (10W charging) வசதியும் உள்ளது. மேலும் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor)வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

டூயல் சிம், 4ஜி, ஜிபிஎஸ், வைஃபை, எப்எம் ரேடியோ, புளூடூத், ஒடிஜி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன். மிஸ்டரி ஒயிட் (Mystery White), அல்பெங்லோ கோல்ட் (Alpenglow Gold), மற்றும் கிராவிட்டி பிளாக் (Gravity Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Pop 8 goes on sale for the first time on Amazon today: check Price, Launch Offers, Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X