தாறுமாறான ஸ்பெக்ஸ்.. விலை வெறும் ரூ.6,999 மட்டுமே.! கலக்கலாக வெளிவந்த புது Mobile.!
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் என்பது ஒரு லக்ஸரி ஐட்டம் போல மிகவும் விலை உயர்ந்த பொருட்களாகிவிட்டது. இன்றைய தினத்தில் ஒரு தரமான ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்றால், கட்டாயம் மக்கள் ரூ.25,000 முதல் ரூ.35,000 விலைக்குள் கிடைக்கின்றன.
இது பெரும்பாலான மக்களின் பட்ஜெட்டிற்குள் வரவில்லை என்றாலும், வேறு வழி இன்றி மக்கள் அதிக விலை கொடுத்து, லேட்டஸ்ட் ஸ்பெக்ஸ் உடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை வாங்க துவங்கிவிட்டனர். இருப்பினும், இன்னும் சில மக்கள் தெளிவாக குறைந்த விலையில் டீசெண்டான ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்கிறார்கள். முடிந்த அளவிற்கு மலிவு விலையில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்பெக்ஸ் போன்களை வாங்க விரும்புகிறார்கள்.

மலிவு விலையில் தரமான என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்.!
இவர்களின் தேவையை அறிந்த சில நிறுவனங்கள், மக்களுக்கான மலிவு விலை போன்களை வழங்குகின்றன. அந்த வகையில், இப்போது வெளியாகியுள்ள புதிய ஸ்மார்ட்போன் சாதனம் தான் டெக்னோ நிறுவனத்திற்குச் சொந்தமான Tecno Pop 7 Pro சாதனம். டெக்னோ நிறுவனம் இந்தியச் சந்தையில் பாப் தொடரின் கீழ் புதிய மலிவு விலை, நுழைவு நிலை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
Tecno Pop 7 Pro சாதனம் மலிவு விலையில் சில மிரட்டலான அம்சங்களை பேக் செய்து இந்திய மக்களின் ஈர்த்துள்ளது. உண்மையை சொல்ல போனால், இவ்வளவு குறைந்த விலையில் இத்தகைய அம்சங்களை ஒரு போனில் பேக் செய்ய முடியுமா? என்று நீங்களே வியந்துவிடுவீர்கள். சரி, இந்த போனில் அப்படி என்னென்ன அம்சங்கள் பேக் செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Tecno Pop 7 Pro சிறப்பம்சங்கள்
- 6.56' இன்ச் கொண்ட IPS LCD எச்டி+ உடைய 1612 × 720 பிக்சல் டிஸ்பிளே
- 120 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேஷியோ
- வாட்டர் டிராப் நாட்ச்
- குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 சிப்செட்
- ஒருங்கிணைந்த IMG PowerVR GPU
- ஆண்ட்ராய்டு 12 (Go Edition) உடன் HiOS 11.0 இயங்குதளம்
- 2 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் (+ 2ஜிபி எக்ஸ்பெண்டபிள் ரேம்)
- 3 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் (+ 3ஜிபி எக்ஸ்பெண்டபிள் ரேம்) என இரண்டு மாடல்
- மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
- முன்பக்கத்தில் 5MP கேமரா
- பின்புறத்தில் 12MP பின்புற கேமரா டூயல் எல்இடி ஃபிளாஷ்
- 10W சார்ஜிங்
- 5000mAh பேட்டரி
- USB Type-C போர்ட்
- ஃபேஸ் அன்லாக்
- எண்ட்லெஸ் பிளாக் மற்றும் யுயுனி ப்ளூ நிறம்
- டூயல்-சிம்
- 4ஜி
- வைஃபை (2.4GHz மற்றும் 5GHz)
- புளூடூத் 5.0
- GPS

Tecno Pop 7 Pro விலை
டெக்னோ பாப் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை பற்றி பேசுகையில், இந்த டிவைஸின் 2ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ. 6799 விலையில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.7299 என்ற விலையில் வருகிறது. டெக்னோ பாப் 7 ப்ரோ பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் Amazon வழியாகப் பிரத்தியேகமாக வாங்குவதற்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மலிவு விலையில் தரமான போனை வாங்க நினைப்பவர்கள் இந்த போனை மிஸ் செய்யக்கூடாது.


Click it and Unblock the Notifications
