இந்த புது Mobile போனை வாங்க Amazon-ஐ மொய்க்கும் மக்கள்.! காரணம் விலை ரூ.6000 மட்டுமே.!
டெக்னோ (Tecno) நிறுவனம், அதற்கு சொந்தமான புதிய ஸ்மார்ட்போன் மாடலை இன்று இந்தியாவில் விற்பனை செய்ய துவங்குகிறது. இந்த மொபைல் போனை நிறுவனம் டெக்னோ பாப் 7 ப்ரோ (Tecno POP 7 Pro) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் வெறும் 6000 ரூபாய் விலை பிரிவில், அட்டகாசமான அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
டெக்னோவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலான Tecno POP 7 Pro மாடலை நிறுவனம் ஏற்கனவே நைஜீரியா உட்பட சில நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்குள் இந்த புதிய Tecno POP 7 Pro சாதனம் மிகவும் குறைந்த விலையில், ரூ.6000 முதல் 7500 விலைக்குள் வாங்க கிடைக்கிறது. மலிவு விலையில் புது டிவைஸ் வாங்க துடிக்கும் வாடிக்கையாளர்கள் குறிவைத்து இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது.

மலிவு விலையில் Tecno Pop 7 Pro வாங்க சிறந்ததா? இல்லையா?
இந்த மலிவு விலையில், இந்த ஸ்மார்ட்போனில் என்னென்ன ஸ்பெஷல் அம்சங்கள் இடம்பெறுகிறது, இது வாங்க சிறந்ததா? இல்லையா? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். டெக்னோ பாப் 7 ப்ரோ இன்று முதல் முறையாக நாட்டில் விற்பனைக்கு வருகிறது. இது ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் மாடலாகும். கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

Tecno Pop 7 Pro அம்சங்கள்
- 6.56' இன்ச் அளவுள்ள HD+ கொண்ட 1612 × 720 பிக்சல் உடைய டிஸ்பிளே
- வாட்டர் டிராப் நாட்ச்
- குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட்
- 2ஜிபி ரேம் + 64ஜிபி / 3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ்
- பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
- IMG PowerVR ஜிபியு
- ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) உடன் HiOS 11.0 ஸ்கின்
- 12MP ப்ரைமரி ரியர் ஷூட்டர் கேமரா
- AI லென்ஸ் கேமரா
- முன்பக்கத்தில் 5MP ஷூட்டர்
- டூயல்-எல்இடி ஃபிளாஷ்
- 5000mah பேட்டரி
- 10W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- டைப்-சி சார்ஜிங் போர்ட்
- 3.5மிமீ ஆடியோ ஜாக்
- பிளாக் மற்றும் யுயுனி ப்ளூ வண்ணம்
- டூயல் சிம்
- 4G
- WiFi (2.4GHz மற்றும் 5GHz)
- புளூடூத் 5.0
- GPS

Tecno Pop 7 Pro விலை என்ன தெரியுமா?
டெக்னோ பாப் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் இன்று முதல் வாங்கக் கிடைக்கும். இந்த சாதனத்தின் அடிப்படை வேரியண்ட் மாடலான 2ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மாடல் வகையின் விலை ரூ.6799 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், 3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ.7299 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இன்று முதல் வாங்க கிடைக்கிறது.
மிகவும் மலிவு விலையில், புது போன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் இன்று (பிப்ரவரி 22) மதியம் 12:00 மணி முதல் அமேசான் வழியாக பிரத்தியேகமாக இந்த Tecno Pop 7 Pro ஸ்மார்ட்போனை வாங்கலாம். மலிவு விலையில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் சாய்ஸ் ஆக இந்த போன் திகழ்கிறது.


Click it and Unblock the Notifications