யாருடா தம்பி நீ? இப்படி ஒரு மொபைல் போனை ரிலீஸ் பண்ணுற? ரொம்ப தைரியம் தான்ப்பா உனக்கு.!
டெக்னோ (Tecno) நிறுவனம், அதற்கு சொந்தமான புதிய ஸ்மார்ட்போன் மாடலை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் போனை நிறுவனம் டெக்னோ பாப் 7 ப்ரோ (Tecno POP 7 Pro) என்ற பெயரில் அறிமுகம் செய்யவிருக்கிறது.
டெக்னோவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலான Tecno POP 7 Pro மாடலை நிறுவனம் ஏற்கனவே நைஜீரியா உட்பட சில நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்குள் இந்த புதிய Tecno POP 7 Pro சாதனம் மிகவும் குறைந்த விலையில், ரூ.15,000 விலைக்குள் - புது டிவைஸ் வாங்க துடிக்கும் வாடிக்கையாளர்கள் குறிவைத்து அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறுகிறது என்று இப்போது பார்க்கலாம்.

பட்ஜெட் விலையில் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் புது போன் இது தானா?
தெரியாதவர்களுக்கு, வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மாடலான Tecno POP 7 Pro சாதனம், டெக்னோ ஸ்பார்க் கோ 2023 (Tecno Spark Go 2023) இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. டெக்னோ நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை வரும் வாரம் அறிமுகம் செய்யுமென்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிவிட்டரில் நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, இதில் துல்லியமான நாள் விபரம் இடம்பெறவில்லை.
ஆனால், வரும் வாரத்தில் நிறுவனம் அதன் புதிய Tecno POP 7 Pro போனை இந்திய சந்தையில் பட்ஜெட் மொபைல் (Budget mobile) பிரிவில் அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் ஸ்பெக்ஸ் (Specs) விபரங்களை பொறுத்தவரை, Tecno POP 7 Pro ஆனது 720p தெளிவுத்திறனுடன் கூடிய 6.6' இன்ச் LCD டிஸ்பிளேவை (Display) கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

Tecno POP 7 Pro ஸ்மார்ட்போனில் இடம்பெறும் டீசெண்டான அம்சங்கள்.!
இது MediaTek Helio A22 சிப்செட் (Chipset) உடன் வெளிவரும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. ஸ்டோரேஜ் (Storage) பற்றி பேசுகையில், இது இரண்டு ரேம் விருப்பங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 3ஜிபி ரேம் அல்லது 4ஜிபி ரேம் (RAM) உடன் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 512ஜிபி வரை எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் (External storage) இடம் பெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய Tecno POP 7 Pro ஸ்மார்ட்போனின் கேமரா (Camera) அம்சம் பற்றி பார்க்கையில், இது 13MP பிரைமரி கேமரா மற்றும் QVGA டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு இதன் முன்பக்கத்தில் 5MP சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் USB-C போர்ட் வழியாக 10W சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியை (Battery) பேக் செய்துள்ளது.

யாருக்கெல்லாம் இந்த போன் செட் ஆகும்?
இந்த புதிய டெக்னோ POP 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை (Price) பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் நைஜீரியாவில் 64,000 நைஜீரிய நைரா என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 11,428 விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, Tecno POP 7 Pro ஆனது இந்தியாவிலும் பட்ஜெட் போனாக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் சாதனம் எண்ட்லெஸ் பிளாக் (Endless Black), யுயுனி ப்ளூ (Uyuni Blue) மற்றும் நெபுலா பர்பில் (Nebula Purple) ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 முதல் 15,000 விலைக்குள் இப்போது 5ஜி (5G) போன்களே (5G Phones) கிடைக்கும் போது, இந்த போன் எப்படி போட்டியிடப் போகிறது என்பது ஆர்வத்தை தூண்டுகிறது.
பட்ஜெட் விலையில், அதிக செலவின்றி ஒரு புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை வீட்டில் உள்ள பெரியவர்கள் அல்லது சிறுவர்களுக்காக வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இந்த ஸ்மார்ட்போன் மாடலை நீங்கள் கருத்தில் வைக்கலாம்.


Click it and Unblock the Notifications








