அட்டகாசமான டெக்னோ பாப் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
டெக்னோ நிறுவனம் நைஜீரியாவில் டெக்னோ பாப் 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது டெக்னோ பாப் 6 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே
டெக்னோ பாப் 6 ஸ்மார்ட்போன் ஆனது 6.1-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1560 பிக்சல் தீர்மானம் மற்றும்சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

குவாட்-கோர் பிராசஸர்
புதிய டெக்னோ பாப் 6 ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாகஇருக்கும். அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
அதேபோல் இந்த டெக்னோ பாப் 6 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ள டெக்னோ பாப் 6 ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5எம்பி பிரைமரி லென்ஸ்
இந்த டெக்னோ பாப் 6 ஸ்மார்ட்போனில் 5எம்பி பிரைமரி லென்ஸ் + ஏஐ லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும்வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி
டெக்னோ பாப் 6 சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு இந்த சாதனத்தில் பாஸ்ட்சார்ஜிங் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கைரேகை ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட பல அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

3.5எம்எம் ஆடியோ ஜாக்
டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 4.2, வைஃபை 802.11 பி/ஜி/என், டூயல் சிம், 3.5எம்எம் ஆடியோ ஜாக், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications