வெறும் ரூ.6,099 விலையில் இப்படி ஒரு போன் வாங்கலாமா? பட்டைய கிளப்பும் Tecno Pop 6 Pro.!

|

பட்ஜெட் மற்றும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பயனர்களையே ஒரு புதிய ஸ்மார்ட்போன் சாதனம் வியப்படையச் செய்துள்ளது என்றால், அது இந்த Tecno Pop 6 Pro ஸ்மார்ட்போனால் மட்டுமே முடியும். காரணம், இந்த ஸ்மார்ட்போனின் விலை யாரும் எதிர்பார்த்திடாத வகையில் மிகவும் மலிவாக அமைந்துள்ளது. டீசெண்டான அம்சங்களுடன் இந்த Tecno Pop 6 Pro இப்படி ஒரு மலிவு விலையில் கிடைத்தால், யார் தான் வியப்படையமாட்டார்கள்.

மலிவு விலையில் ஒரு பெஸ்ட் போனா இந்த டெக்னோ பாப் 6 ப்ரோ?

மலிவு விலையில் ஒரு பெஸ்ட் போனா இந்த டெக்னோ பாப் 6 ப்ரோ?

டெக்னோ நிறுவனம் டெக்னோ பாப் 6 ப்ரோ என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. டெக்னோ பாப் 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, இப்போது வங்கதேசத்தில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெக்னோவின் சமீபத்திய ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் உடன் பெரிய டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 8MP பின்புற கேமரா மற்றும் 5MP செல்ஃபி கேமராவை வழங்குகிறது.

என்ட்ரி லெவல் போனாக இருந்தாலும் வேற லெவல் தான்

என்ட்ரி லெவல் போனாக இருந்தாலும் வேற லெவல் தான்

என்ன கேமராவின் மெகாபிக்சல் குறைவாக இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கு, இது ஒரு மலிவு விலை ஸ்மார்ட்போன் சாதனம் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறோம். இது மலிவு விலை போனாக இருந்தாலும் கூட, இதில் 5000mAh பேட்டரி, குவாட்-கோர் சிப்செட், பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஆண்ட்ராய்டு கோ போன்றவை வழங்கப்படுகிறது. சரி, இந்த ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறுகிறது, இதன் விலை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!

Tecno Pop 6 Pro சிறப்பம்சம்

Tecno Pop 6 Pro சிறப்பம்சம்

புதிய Tecno Pop 6 Pro சாதனம் 720 × 1612 பிக்சல் தீர்மானம் கொண்ட எச்டி+ 6.6' இன்ச் அளவு உடைய, 120Hz டச் சாம்ப்ளிங் ரேட் கொண்ட வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது குவாட் ஆக்டா கோர் சிப்செட் உடன் இயங்குகிறது. சிப்செட் பற்றிய விவரங்களை Tecno குறிப்பிடவில்லை. இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடலாக வருகிறது. இது ஆண்ட்ராய்டு 12 Go எடிஷனில் இயங்கும் HiOS 8.6 உடன் இயங்குகிறது.

டூயல் ரியர் கேமராவுடன் பெரிய சைஸ் பேட்டரி

டூயல் ரியர் கேமராவுடன் பெரிய சைஸ் பேட்டரி

இந்த டிவைஸ் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில், 8MP பிரைமரி ஷூட்டர் உடன் AI லென்ஸ் மற்றும் LED ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு மலிவு விலை என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் சாதனம் என்பதனால் இதில் 5MP செல்பி கேமராவழங்கப்பட்டுள்ளது. இது 5000mah பேட்டரியை பேக் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் பாதுகாப்பும் உள்ளது.

உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!

இந்தியாவில் இதன் விலை என்ன இருக்கும்?

இந்தியாவில் இதன் விலை என்ன இருக்கும்?

இது ஃபேஸ் அன்லாக் அம்சத்தையும் ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் பவர் பிளாக் மற்றும் பீஸ்ஃபுல் ப்ளூ வண்ண விருப்பங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய டெக்னோ பாப் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை பற்றிப் பார்க்கையில், இத்தகைய அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெறும் ரூ. 6,099 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும், இந்த சாதனம் தீபாவளிக்கு முன்னதாக இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனிற்கு போட்டியான மாடல் எது?

இந்த ஸ்மார்ட்போனிற்கு போட்டியான மாடல் எது?

டெக்னோ பாப் 6 ப்ரோ பல நுழைவு-நிலை ஸ்மார்ட்போன்களில் நாம் பார்த்த வழக்கமான அம்சங்களைக் கொண்டுள்ளது என்றாலும் கூட, இது பெரிய டிஸ்ப்ளே மற்றும் 5,000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இதனால், மலிவு விலை பிரிவில் புது போன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களை இந்த ஸ்மார்ட்போன் அதிகம் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. Redmi A1 ஆனது Tecno Pop 6 Pro இன் மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Tecno Pop 6 Pro Will Soon Debut in India Know Price and Specification Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X