Home
Mobile

Tecno Pop 6 Pro மீது சலுகை இல்ல தள்ளுபடி இல்ல.! ஆனா விலை மட்டும் ரூ.6,099 தான்.! எப்படி?

கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவில் அதிகம் டீஸ் செய்யப்பட்ட மலிவு விலை ஸ்மார்ட்போன் என்றால், அது இந்த Tecno Pop 6 Pro ஸ்மார்ட்போன் மாடலாக மட்டுமே இருக்கும். நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு, டெக்னோ நிறுவனம் இறுதியாக இன்று டெக்னோ பாப் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Tecno Pop 6 Pro ஸ்மார்ட்போன் மாடலானது கடந்த வாரம் வங்கதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tecno Pop 6 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Tecno Pop 6 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

டெக்னோவின் பாப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களைப் போலவே, Tecno Pop 6 Pro ஸ்மார்ட்போனும் ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் மாடலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்பதனால், டீசெண்டான அம்சங்களுடன் இது முதல் முறையாக ஸ்மார்ட்போன் வாங்குபவர்களை இலக்காகக் கொண்டு மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உண்மையிலேயே, இதன் விலை மிகவும் மலிவாகத் தான் இருக்கிறது.

என்ட்ரி லெவல் போனில் இத்தகைய அம்சங்களா?

என்ட்ரி லெவல் போனில் இத்தகைய அம்சங்களா?

Tecno Pop 6 Pro போனின் விலை தான் மலிவே தவிர, இதில் இருக்கும் அம்சங்களுக்குக் குறைவே இல்லை. இது அட்டகாசமான குவாட் கோர் சிப்செட் உடன் சீறிப்பாய்கிறது. இது 5000mah கொண்ட பெரிய பேட்டரியை பேக் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்ப்ளே பேனல் மற்றும் டூயல் ரியர் கேமரா அமைப்பை வழங்குகிறது. இந்த சாதனம், Redmi A1 மற்றும் Realme C30 போன்ற மாடல்களுடன் போட்டியில் இறங்குகிறது.

Tecno Pop 6 Pro ஸ்மார்ட்போனின் விலை என்ன?

Tecno Pop 6 Pro ஸ்மார்ட்போனின் விலை என்ன?

இந்தியாவில் Tecno Pop 6 Pro ஸ்மார்ட்போனின் விலை என்ன? இதை எப்போது வாங்கலாம்? இதன் சிறப்பம்ச விபரங்கள் என்ன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம். டெக்னோ பாப் 6 ப்ரோவின் விலை பற்றிப் பார்க்கையில், இந்த புதிய ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் விலை ரூ.6,099 ஆக இருக்கிறது. இது இப்போது Amazon வழியாக பிரத்தியேகமாக வாங்குவதற்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tecno Pop 6 Pro சிறப்பம்சம்

Tecno Pop 6 Pro சிறப்பம்சம்

புதிய Tecno Pop 6 Pro சாதனம் 720 × 1612 பிக்சல் தீர்மானம் கொண்ட எச்டி+ 6.6' இன்ச் அளவு உடைய, 120Hz டச் சாம்ப்ளிங் ரேட் கொண்ட வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது குவாட் ஆக்டா கோர் ஹீலியோ A22 சிப்செட் உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி LPDDR4X ரேம் + 32 ஜிபி eMMC5.1 ஸ்டோரேஜ் மாடலாக வருகிறது. இது ஆண்ட்ராய்டு 12 Go எடிஷனில் இயங்கும் HiOS 8.6 உடன் இயங்குகிறது.

டீசெண்டான கேமரா.. பெரிய சைஸ் பேட்டரி

டீசெண்டான கேமரா.. பெரிய சைஸ் பேட்டரி

இந்த டிவைஸ் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில், 8MP பிரைமரி ஷூட்டர் உடன் AI லென்ஸ் மற்றும் LED ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு மலிவு விலை என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் சாதனம் என்பதனால் இதில் 5MP செல்பி கேமராவழங்கப்பட்டுள்ளது. இது 5000mah பேட்டரியை பேக் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் பாதுகாப்பும் உள்ளது.

Tecno Pop 6 Pro யாருக்கு பெஸ்ட் சாய்ஸ்?

Tecno Pop 6 Pro யாருக்கு பெஸ்ட் சாய்ஸ்?

இந்த Tecno Pop 6 Pro சாதனம் பவர் பிளாக் மற்றும் பீஸ்ஃபுல் ப்ளூ வண்ண விருப்பங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 42 நாட்கள் வரை ஸ்டான்பை நேரத்தை வழங்குகிறது. சாதனத்தின் சார்ஜிங் திறன்கள் மற்றும் சார்ஜிங் போர்ட் வகை இன்னும் அறியப்படவில்லை. மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது டூயல் சிம், 4ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஓடிஜி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. மலிவு விலையில் பெஸ்டான போனை வாங்க நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.

Best Mobiles in India

English summary
Tecno Pop 6 Pro Entry Level Smartphone With 5000mah Battery Price In India and Availability
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X